Thursday, November 19, 2009

Whole Life பாலிசிகள் . . .

- செல்லமுத்து குப்புசாமி

பாகம் 1
பாகம் 2

கடந்த இரு பகுதிகளில் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றியும், Endowment plans பற்றியும் கண்டோம்.

அதாவது, Endowment பாலிசிகளுக்கு குறிப்பிட்ட கால அளவு இருக்கும். அதற்குள் ரிஸ்க் ஏற்பட்டால் Sum Assured இழப்பீட்டுத் தொகையும், அது வரைக்குமான போன்ஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும். மாறாக, பாலிசி முதிர்வு எய்தும் வரை பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் முழு Sum Assured + போனஸ் எல்லாம் கிடைக்கும்.

இப்போது இவ்விரு வகையான திட்டங்களைத் தவிர்த்து Whole Life Plans என்ற மூன்றாவது ஒரு பிரிவையும் பார்த்து விடுவோம்.

கிட்டத்தட்ட இது டெர்ம் இன்சூரன்ஸ் போலத்தான். மெச்சூரிட்டி அல்லது முதிர்வு என்பதே கிடையாது. ஆயுட்காலம் முழுவதும் பிரீமியம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு ஆள் பத்து வயதில் பாலிசி எடுத்திருந்தாலும் கூட அவர் 80 வயதில் இறக்கும் போது மட்டுந்தான் அவர் குடும்பத்திற்குப் பணம் கிடைக்கும்.

எனினும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து Whole Life பாலிசி வேறுபடத்தான் செய்கிறது.

* டெர்ம் இன்சூரன்ஸில் பிரீமியம் பணம் செலுத்தினால் அவ்வளவுதான். அது திரும்பக் கிடைக்காது. Whole Life திட்டத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை முறித்துக்கொண்டு வெளியே வரலாம். அது வரை செலுத்திய பிரீமியத்தின் ஒரு பகுதி திரும்பக் கொடுத்து விடுவார்கள்.

* டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் மரணத்தின் போது Sum Assured தொகை மட்டுமே கிடைக்கும். Whole Life திட்டத்தில் மரணத்தின் போது Sum Assured + போனஸ் ஆகிய இரண்டும் கிடைக்கும்.

இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் Whole Life திட்டங்களைக் காட்டிலும் Endowment பாலிசிகளே அதிகம் வரவேற்பைப் பெறுகின்றன. அதற்குக் காரணங்கள்..

Endowment பாலிசியில் 10, 15 அல்லது 20 என நிச்சயிக்கப்பட்ட முதிர்வு காலம் உண்டு. அதற்குப் பிறகு பாலிசிதாரரே பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் Whole Life இல் மரணத்திற்குப் பிறகுதான் பணம் வரும்.

பல தனியார் பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் Whole Life திட்டங்களையே மார்க்கெட் செய்கின்றன. ஒரு நபர் வாழும் வரை அவரிடமிருந்து பிரீமியம் தொகையைப் பெற்றுக்கொண்டே இருக்கலாம் என்பது முக்கியமான காரணம். அதாவது 10 அல்லது 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை அல்லவா!

--
சென்ற பதிவைத் தொடர்ந்து சில பேர் என்னிடம் தெரிவித்த ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

I just thought that the blog regarding insurance is some what misleading, It gives an impression that the returns are excellent compared to other assets.

இது உண்மை. இன்சூசன்ஸ் என்பது முதலீடு அல்ல.

முதலீடு என்றாலே கூடவே ஒரு நிச்சயமற்ற தன்மையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதில் ஒரே வருடத்தில் நமது முதலீடு இரட்டிப்பாகலாம் அல்லது பாதியாகவும் குறையலாம். அது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

நான் இன்சூரன்ஸை முதலீடு என்று கூறவில்லை. அது ஒரு வகையான சேமிப்பு. ஒரு பாதுகாப்பு.

இந்தியாவில் இன்சூரன்ஸை இன்சூரன்ஸாக மட்டும் மக்கள் அணுகுவதில்லை என்பதாலாயே சேமிப்பு என்ற வடிவில் இங்கு Endowment திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன.

”நான் இறந்து போனால் என் குடும்பத்துக்கு எவ்வளவு வரும் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இன்சூரன்ஸை முதலீடு போலத்தான் அணுகுகிறேன்” – என்று யாராவது சொன்னால் அவர்கள் வேறு எதிலாவது முதலீடு செய்யலாம்.

என்னைக் கேட்டால் அத்தனை பேரும் முதலீடு செய்ய வேண்டும். அதில் உள்ள நெளிவு சுழிவுகளையும், நிச்சயமற்ற தன்மையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். அதற்காக இன்சூரன்ஸ் கூடவே கூடாது என்று எண்ணி விட வேண்டாம்.

Butterfly emerges from caterpillar. எட்டாம் வகுப்புக்குப் பிறகுதான் ஒன்பதாம் வகுப்பு. சேமிப்புக்குப் பிறகுதான் முதலீடு. இன்சூரன்ஸ் என்பது சேமிப்பையும் தாண்டி பாதுகாப்பு என்ற நோக்கில் அணுக வேண்டியது.

வீட்டுக்கு பூட்டு வாங்குவதைப் போல, தலைக்கு ஹெல்மெட் வாங்குவதைப் போல மனிதனுக்கு ஆயுள் காப்பீடு முக்கியம். ஐநூறு ரூபாய் போட்டு ஹெல்மெட் வாங்கினால் பத்து வருடத்தில் என் பணம் எத்தனை மடங்கு பெருகும் என்று கேட்டால் நன்றாகவா இருக்கும்?

ஏன் இன்சூரன்ஸ் வேண்டும் என்பது அடுத்த பதிவிலும் ..

3 comments:

Anonymous said...

Good post

perumal said...

உயர்திரு சார்,

வணக்கம்

//Butterfly emerges from caterpillar. எட்டாம் வகுப்புக்குப் பிறகுதான் ஒன்பதாம் வகுப்பு. சேமிப்புக்குப் பிறகுதான் முதலீடு. இன்சூரன்ஸ் என்பது சேமிப்பையும் தாண்டி பாதுகாப்பு என்ற நோக்கில் அணுக வேண்டியது.

வீட்டுக்கு பூட்டு வாங்குவதைப் போல, தலைக்கு ஹெல்மெட் வாங்குவதைப் போல மனிதனுக்கு ஆயுள் காப்பீடு முக்கியம். ஐநூறு ரூபாய் போட்டு ஹெல்மெட் வாங்கினால் பத்து வருடத்தில் என் பணம் எத்தனை மடங்கு பெருகும் என்று கேட்டால் நன்றாகவா இருக்கும்?//

இங்கதான் சார் நிக்கறீங்க நீங்க. மகா அற்புதமான விளக்கம் இது. பங்குசந்தையின் கதவுகளை திறந்து விட்டதைபோல இந்த வரிகளினால் இன்சுரன்சை பற்றிய அடிப்படை புரிதல்களை மேற்கண்ட வரிகள் மூலம் அற்புதமாக புரிய வைத்து விட்டீர்கள்.

நன்றி


பணிவுடன்
பெருமாள்
கரூர்

Chellamuthu Kuppusamy said...

மிக்க நன்றிங்க பெருமாள். இந்தப் பின்னூட்டம் எனை மேலும் பொறுப்புள்ளவனாக ஆக்குகிறது.