Thursday, June 01, 2006

NAV மேட்டரும் சாப்ட்வேர் ஆசாமியும்!!

-குப்புசாமி செல்லமுத்து

"டேய், எவனப் பாத்தாலும் நாவ் நாவ் னு சொல்லிட்டுத் திரியறானுகளே, என்ன எழவுடா அது" கணியப்பன் (கணிணியப்பனின் சுருக்கம்) கேள்வி.

"நாவ் இல்லடா அது. NAVனு சொல்லனும். என்.ஏ.வி. ஒரு வாட்டிச் சொல்லு பாக்கலாம்" காசப்பன் பதில்.

"அடங்குடா டே. நீ SAP ஐ சாப் சாப் னு சொல்லிக் கொலை பண்றியே. நான் கண்டுக்கிட்டனா?"

"சரீ சரீ...ரிலாக்ஸ். உனக்கு இப்போ NAV மேட்டர் தெரியனும் அவ்ளோ தானே? அடிப்படையில இருந்து உனக்கு விளக்கணும்டா"

"ம்..ம்"

கதை சொல்ல ஆரம்பிக்கிறார் நம்ம காசப்பன்.

"உங்க சாப்ட்வேர் கம்பெனியில பத்து பேர் இருக்கீங்கன்னு வச்சுக்கோ. உன்னை மாதிரியே அவங்களுக்கும் ஷேர்ல இன்வெஸ்ட் பண்ண ஆசை"

"எங்கூட இருக்குற எவன்டா ஷேர்ல இன்வெஸ்ட் பண்றான்? அவனவன் ECRல (பைக் பின் சீட்டுல பொண்ணுங்கள வச்சு) சுத்தறதுக்கே டைம் போதலைன்னு பொலம்புறானுக"

"உன் ஆதங்கம் எனக்குப் புரியுதுடா. அதப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். நான் சொல்றதை இப்போ ஒழுங்கா கேக்கறியா இல்லியா?"

"ம்"

"உங்களுக்கு டைம் இல்லததாலையும், ஷேர் பத்தி விவரம் தெரியாததாலையும் வேற யார் கிட்டயேவது பணத்தக் குடுத்து மேனேஜ் பண்ணலாம்னு ஐடியா பண்றீங்க. ஆளுக்கு 10,000 ரூபா போட்டதால் ஒரு லட்சம் ஆகுது மொத்த அமவுண்ட். என்னோட திறமை மேல நம்பிக்கை வச்சு அந்தப் பணத்தை இன்வெஸ்ட் பண்ணச் சொல்லி என் கிட்ட hand over பண்றீங்க."

"மாப்ள, அங்க சுத்தி இங்க சுத்தி மேட்டருக்கு வந்துட்ட பாத்தியா?"

"சும்மா ஒரு பேச்சுக்குத்தான்டா. அந்தப் பணத்த நான் சின்ன சின்ன யூனிட்டா பிரிச்சு வச்சுக்கறேன். அதாவது 10,000 யூனிட்டா டிவைட் பண்ணின பின்னாடித் தான் முதலீடு பண்ணவே ஆரம்பிப்பேன். ஒரு லட்சத்தை 10,000 யூனிட்டா பிரிச்சா ஒவ்வொரு யூனிட்டோட மதிப்பு என்ன?"

"ம்.. பத்து ரூபா"

"கரெக்ட். அது தான் NAV. Net Asset Value. அதாவது ஒரு யூனிட்டோட நிகர சொத்து மதிப்பு. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதன் முதலா ஆரம்பிக்கும் போது NAV ரூ.10 தான் இருக்கும். அந்தப் பணத்தை அப்படியே நான் ஷேர்ல முதலீடு பண்றேன். ஷேர் விலை ஏற ஏற நம்ம முதலீட்டு மதிப்பும் ஏறும். ஒரு வாரத்துல நம்ம முதலீடு 1,10,000 ஆகுதுன்னு வச்சுக்கோ. அப்போ NAV என்ன?"

"1,10,000/10000 எவ்வளவு? 11 ரூபா. டேய்... அப்போ இன்வெஸ்ட் பண்ணிய பிறகு விலை குறைஞ்சா NAV கம்மி ஆகுமா?"

"ஒரு லட்சம் போட்டது 95 ஆயிரம் ஆனா, NAV ரூ.9.50 ஆகும்ல. சாப்ட்வேர் என்ஜினியர் மாதிரியாடா கேக்குறே நீ?"

"நாங்கல்லாம் எப்படா காசோட மதிப்ப பாத்திருக்கோம்? சரி.. நீ சொல்றதப் பாத்தா மியூச்சுவல் ஃபண்ட் ரொம்ப சேஃப் அப்படீன்னெல்லாம் சொல்லிக்க முடியாது போல இருக்கு"

"உண்மை தான். ஆனா நீயே முதலீடு செய்யறதுக்குப் பதிலா, ஒரு திறமையான ஆள் - என்னை மாதிரி - கிட்ட குடுத்து முதலீடு செய்யறீங்கல்ல.. அதனால முட்டாள் தனமான முடிவு எடுத்து கண்ட கழுதைக் கம்பெனி ஷேர் வாங்கறத அவாய்ட் பண்ணிறலாம்"

"மாப்ள.. நீ ரொம்ப நல்லவன்டா!!!" கைப்புள்ள ஸ்டைலில் ·பீல் பண்ணினான் கணியப்பன்.

"ஹாஹாஹா.. அதுக்குத் தான் அந்த ஒரு லட்சத்துல 2 ஆயிரம் நான் எடுத்துக்கப் போறனே. Fund Management Fees மச்சி fees"

$%^$^(&^()*()*^
"என்னை விடுடா நான் போறேன்.." கணி எஸ்கேப்.

"டேய் டேய்..எங்கடா போறே. சொல்லிட்டுப் போ..."

"ம்ம்ம்.. என் பைக்கை விக்கப் போறேன். பின்னாடி சீட் காலியாவே வச்சு வண்டி ஓட்டறதுக்கு எதுக்குடா பைக்"

சாப்ட்வேர் ஆசாமி எப்படியோ mutual fund மேனேஜரான காசப்பனிடம் இருந்து தப்பிவிட்டான். அட.. இவன் போனா என்ன. அதான் கழுத்துல ID கார்டு தொங்கப் போட்டுக்கிட்டு நிறையப் பேர் அலையறானுகளே!!!!

28 comments:

Udhayakumar said...

நல்ல துவக்கம்... waiting for more!!!

பரணீ said...

நல்ல விளக்கம், நன்றி.

செந்தில் குமார் said...

குப்புசாமி,

நல்ல பதிவு! எளிதான விளக்கங்கள்!!
பங்குச் சந்தை மட்டுமில்லாமல் பிற இடங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் உண்டென கேள்விப் பட்டிருக்கிறேன், அதை பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்!

நன்மனம் said...

//இவன் போனா என்ன. அதான் கழுத்துல ID கார்டு தொங்கப் போட்டுக்கிட்டு நிறையப் பேர் அலையறானுகளே!!!!//


அவுக எல்லோரும் இதை படிக்க கடவுக.:-))

Anonymous said...

Really superb article!!

Kuppusamy Chellamuthu said...

உதயகுமார், பரணீ, அனானி அனைவருக்கும் நன்றி.

//அவுக எல்லோரும் இதை படிக்க கடவுக.:-))//
நன்மனம், நமது நோக்கம் யாருடைய ஊக்கத்தையும் குலைப்பது அல்ல. அதே நேரத்தில் இதைப் படிப்பதால் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் முடிவை மாற்ற வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.

-குப்புசாமி செல்லமுத்து

நன்மனம் said...

குப்புசாமி,

நீங்க கடைசியா ஜோக்கா போட்டதுக்கு, நானும் ஜோக்கா தான் சொல்லிருக்கேன். பக்கத்துல சிரிப்பான் வேற போட்டிருக்கேன், என்னக்கு இவ்வளவு சீரியசா பதில் சொல்லிட்டீங்களே.:-)

Kuppusamy Chellamuthu said...

கரெக்ட் தாங்க நன்மனம். நீங்க ஜோக்கா சொன்னீங்க தான். இருந்தாலும் பணவிஷயத்துல எது எழுதினாலும் கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கை உணர்வால் தான் அப்படி சீரியஸ் ஆகிட்டேன். உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் .. அடச்சே..மறுபடியும் சீரியஸ்..

//நாங்கல்லாம் எப்படா காசோட மதிப்ப பாத்திருக்கோம்? // இது கூட ஜோக் மாதிரித் தான் தெரியும். ஆனால் சுடுகின்ற நிஜம். :-)

-குப்புசாமி செல்லமுத்து

பொன்ஸ்~~Poorna said...

குப்புசாமி, என்னங்க?நேத்து உங்க கம்பனில நடந்ததை அப்படியே எழுதி இருக்கீங்களா?!! :)

ஆரம்பம் நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் அதிகம் பதங்களை விளக்கி இருக்கலாம்.. கட்டுரையின் சீரியஸ்னஸ் குறைவா இருப்பதாகத் தோன்றுகிறது

Kuppusamy Chellamuthu said...

சரியாக் கண்டு பிடிச்சுட்டீங்களே பொன்ஸ். கணியப்பன் தனது பைக்கை இன்னும் விற்கவில்லை என்பது ஆறுதலான விடயம். :)

உங்களது திறனாய்வு மிகச் சரியானது. எனக்கே ஏதோ அரைவேக்காட்டுத் தனமாக எதையை எழுதுவதாக இருந்தது. முழு நீளக் கட்டுரையாக இல்லாமல் உரையாடல் வடிவில் அமைக்க முயன்றதன் விளைவு. முடிவு சீரியஸ்னஸ் இல்லாமலும், ஒட்டுதல் இல்லாமலும் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//அதான் கழுத்துல ID கார்டு தொங்கப் போட்டுக்கிட்டு நிறையப் பேர் அலையறானுகளே!!!!//

:-))))))))

பணத்த விடுங்க குப்பை அது இன்னிக்குப் போகும் நாளைக்கு வரும். போட்டீங்களே ஒரு போடு.இந்தப் பயலுக மட்டும் இல்ல. பொண்ணுங்களும் இப்படித்தான்.தூங்கும் போதுகூட இந்த கர்மாந்திர அட்டைய தொங்க விட்டுக்கிடே அலையுதுக.

Anonymous said...

Don’t apologize yourself Kuppusamy. I have always been amused by people who utter NAV all the time, as I did not know what it really stands for. Despite the hilarious conversation, I reckon this post very useful.

-Ravi

பெத்த ராயுடு said...

நல்ல ஆரம்பம் குப்புசாமி.

சரி, முதலீட்டாளர் செய்யவேண்டிய ஹோம்வொர்க்கை வேறொருவர் செய்ய அவருக்கு கூலி தரவேண்டுமல்லவா?

கட்டணம் முறையானதா என்பதே இங்கு விவாதப்பொருள் என நினைக்கிறேன். சரிங்களா?

இன்டர்நெட்டும், demat-உம் பரவலாகிவிட்ட நிலையில் ம்யூச்சுவல் ஃபண்டுகள் தேவையா?
Disclaimer: இது ஒரு கணிப்பொறியாளனின் பார்வை. :)

Kuppusamy Chellamuthu said...

செந்தில் குமார். பின்னூட்டத்திற்கு நன்றி.

நிதித் திட்டம் தொடங்கப்படும் பொழுதில் திரட்டும் பணத்தை எங்கே, எந்த அளவில் முதலீடு செய்வது என்பது வரையறுக்கப்படும். சில உதாரணங்கள் கீழே..
1. 100% பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள்
2. X % பங்கு மற்றும் 100-X % கடன் பத்திரங்கள்
3. பங்கு 25-70% & கடன் பத்திரம் 75-30%
4. 100% கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள்
5. தங்கத்தில் முதலீடு செய்யும் glit funds
6. ஒரு குற்ப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் மட்டம் முதலீடு செய்பவை எ.கா: pharma funds, infrastructure funds, blue chips
7. IPOவில் மட்டும் கவனம் செலுத்துவதாக அண்மையில் வெளிவந்த ஒரு திட்டம் :-(.. இன்னும் எத்தனையோ..

திட்டம் எப்படி இருந்தாலும் அடிப்படை ஒன்று தான். நமது இலக்கு என்ன என்பதை நிர்ணயம் செய்த பின்னர், அதற்குத் தகுந்த திட்டத்தில் தகுந்த தொகையை முதலீடு செய்யக் கற்க வேண்டும், if at all you are comfirtable with mutual funds :-)

பொன்ஸ், கல்வெட்டு, பெத்தராயுடு & அனானி: உங்களுடன் பிரிதொரு உரையாடல் செய்யவேண்டியிருக்கிறது.

-குப்புசாமி செல்லமுத்து

செந்தில் குமார் said...

உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. நன்றி குப்புசாமி!

Kuppusamy Chellamuthu said...

//கட்டணம் முறையானதா என்பதே இங்கு விவாதப்பொருள் என நினைக்கிறேன். சரிங்களா?// பெத்தராயுடு.. இந்தப் பதிவின் நோக்கம் அது இல்லீங்க. NAV கணக்கிடப் படுவதை ஒரு உரையாடல் மூலமாகச் எடுத்துச் சொல்ல முயன்றது மட்டுமே நோக்கம்.

சில உரையாடல்களில் நான் உணர்ந்த பேச்சுலர் ஏக்கம், பணத்தைச்த் துச்சமாக மதிக்கும் கணிப்பொறியாளர் சமுதாயம் (am I generalising?), மியூச்சுவல் ·பண்டில் பணம் போட்டால் அது குறையவே குறையாது என்கிற மூடத்தனம், மியூச்சுவல் ·பண்ட் நிர்வாகிகள் செய்யும் வேலைக்கு ஒரு கூலி இருக்கிறது என்ற உண்மை இத்தனையும் அதனோடு சேர்த்துச் சொன்ன பதிவு இது.

என்ன இருந்து என்னங்க.. பொன்ஸ் சீரியஸ்னஸ் இல்லேன்னு சொல்லிட்டாங்க :-) :-) உங்க விமர்சனம் சூப்பர் பொன்ஸ்.. இது சும்ம தாமாசுக்குத் தான் போட்டேன்!!

//தூங்கும் போதுகூட இந்த கர்மாந்திர அட்டைய தொங்க விட்டுக்கிடே அலையுதுக.// கல்வெட்டு.. அவுக தூங்கும் போது நீங்க எதுக்குங்க போய்ப் பாக்கறீங்க??? :-) எங்க காலேஜ்ல ஒரு பையன் இருந்தான். தூங்கும் போது கூட கடிகாரத்தைக் கழட்ட மாட்டான். அதுக்காக அவன் டைமை ரொம்ப மதிப்பவன் என்றெல்லாம் இல்லை. சுத்தச் சோம்பேறி.... அவனுக்கு அது இல்லாட்டி ஏதோ ஒன்னு மிஸ் ஆன ·பீலிங் வந்துரும்.. அப்படி ஒரு அட்டாச்மென்ட் தான் இந்தப் பொண்ணுகளுக்கும் இருக்கனும்.. எப்படி நம்ம ஆராய்ச்சி...

Shrini said...

நன்று நண்பரே உமது பணி.
உமது பதிவுகளை எப்படி அச்சடிப்பது?
பிடிஎப் கோப்பாக தமிழ்மணம் வலைமனை மாற்றித் தரும்.
ஆவன செய்வீரா?

பொன்ஸ்~~Poorna said...

//என்ன இருந்து என்னங்க.. பொன்ஸ் சீரியஸ்னஸ் இல்லேன்னு சொல்லிட்டாங்க :-) :-) உங்க விமர்சனம் சூப்பர் பொன்ஸ்.. இது சும்ம தாமாசுக்குத் தான் போட்டேன்!!
//
இத்தனை விளக்க வேண்டியது இருந்தாலே, உங்க பதிவு சரியா ரீச் ஆகலைன்னு தான் அர்த்தம்.. இதுவும் திறனாய்வுதான்.. "சூப்பர்", ரெண்டு சிரிப்பான் எதுவும் தேவையில்லை.. நான் பொதுவா எல்லாத்தையுமே தமாசா எடுத்துக்கிற ஆள் தான் :)

//அப்படி ஒரு அட்டாச்மென்ட் தான் இந்தப் பொண்ணுகளுக்கும் இருக்கனும்.. எப்படி நம்ம ஆராய்ச்சி... //
ஏதாச்சும் ஆராய்ச்சி பண்ணிகிட்டே இருக்காங்கப்பா.. ஒருத்தர் குடையப் பத்தி, ஒருத்தர் அடையாள அட்டையப் பத்தி!! ம்ஹும்.. ஜொ.பாண்டி கிட்ட சொல்லி இதுக்கொரு பதிவு போடச் சொல்லுங்க..
அடடா.. என்னோட ஐடி கார்டைக் காணோமே.. தூங்கி எழுந்தப்போ எங்கயோ கழற்றி வச்சிட்டேன்.. தேடணும் :)

SENSE(FUL)X said...

Great explanation !
Expecting to come more article like this ...
For a retail investor, is it a wise strategy to get the stocks which the Mutual Funds had invested and invest in those ?

ராபின் ஹூட் said...

குப்புசாமி சார்,
அருமையாக உள்ளது சார். மியூச்சுவல் பண்டில் open ended system, close ended system பற்றிச் சொன்னீர்களானால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஜுடுவா said...

எளிமையான சொல்லாடல்கள். நல்ல தொடக்கம். தொடருங்கள்.

Kuppusamy Chellamuthu said...

நன்றி ஸ்ரீ. வலைப்பூவில் என்ன கோளாறு என ஆராய்கிறேன். விரைவில் கோப்பிறக்கத்திற்குத் தேவையானதைச் செய்ய முயற்சிக்கிறேன்.

பொன்ஸ், உங்கள் விமர்சனம்/திறனாய்வு மீண்டும் வரவேற்கப் படுகிறது. இப்போதும் ஸ்மைலி :))
//அடடா.. என்னோட ஐடி கார்டைக் காணோமே.. தூங்கி எழுந்தப்போ எங்கயோ கழற்றி வச்சிட்டேன்.. தேடணும் :) // அப்போ கல்வெட்டு சொன்னது உங்களைத் தான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது.

Sensex(ful)x: இது போன்ற பின்னூட்டங்கள் தான் எனக்கு ஊக்கி.
//For a retail investor, is it a wise strategy to get the stocks which the Mutual Funds had invested and invest in those ?// மோசமான அனுகுமுறையா என இதனைக் கூற என்னால் இயவில்லை. தன் மேல் நம்பிக்கையின்றி பிறறது (பிறறது பணத்தைக் கொண்டு முதலீடு செய்யும் பிறறது) திறமை மேல் நம்பிக்கை வைத்து கண்மூடித்தனமாக பங்குகள் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் என்ன விலைக்கு, என்ன எண்ணிக்கையில், எவ்வளவு காலம் வைத்திருக்கும் உத்தேசத்தில் வாங்கினார் என்பது அவருக்குத் தான் வெளிச்சம். இதயெல்லாம் தாண்டு, சில/பல சமயங்களில் அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுவதால், அசாத்திய இலாபம் கிடைக்கவும் செய்யலாம். அதுக்காக புலியப் (அப்படீன்னு நெனச்ச்சு) பாத்து பூனை சூடு போட்டுக்க கூடாது.

ஜுடுவா & ராபின், உங்கள் இருவரது வாசகங்கள் மரியாதையுடன் வரவேற்கப்படுகின்றன. open ended system, close ended system பற்றிக் காலப்போக்கில் பேசலாம்.

-குப்புசாமி செல்லமுத்து

Kuppusamy Chellamuthu said...

'பிறறது' எழுத்துப் பிழை - 'பிறரது'. மன்னிக்கவும்.
//(பிறறது பணத்தைக் கொண்டு முதலீடு செய்யும் பிறறது)//

செந்தில் குமரன் said...

நல்ல துவக்கம் மேலும் ஆவலாக எதிர்பார்க்கிறேன்

கார்திக்வேலு said...

KS,
நமக்கு காசு மேட்டர்ல அவ்வளவு வியாக்கியானம்
பத்தாது.:-)
பலருக்கும் உபயோகமான தகவல்களை பதிவு செய்திருக்கிங்க.
நல்ல பணி , வாழ்த்துக்கள்

ராபின் ஹூட் said...

//5. தங்கத்தில் முதலீடு செய்யும் glit funds
//
குப்புசாமி சார், glit funds என்றால் தங்கத்தில் முதலீட்டு செய்யப்படுவதில்லை. அவைகள் அரசுக் கடன் பத்திரங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யப்படுபவை.

http://www.investopedia.com/terms/g/giltfund.asp

நான் financial terms களுக்கு இங்குதான் விளக்கங்கள் பெற்றுக் கொள்வேன். :))

Kuppusamy Chellamuthu said...

ராபின்: நல்ல வேளை சொன்னீர்கள். நன்றி. Gold fund என்பதை Gilt fund என எழுதிவிட்டேன். தங்கநிதிகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு அனுமதி அளித்ததாக அறிகிறேன். அதன் பின் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. அவ்வாறு அவை வரும் போது exchange trader fund ஆக அமையும் என்பதே எதிர்பார்ப்பு. ETF குறித்து தனிப்பதிவு ஒன்று இட வேண்டும்.

//நமக்கு காசு மேட்டர்ல அவ்வளவு வியாக்கியானம் பத்தாது.// இங்கே அனைவரும் அப்படித்தான் கார்த்திக். போகப் போகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான்.

-குப்புசாமி செல்லமுத்து

Senthil Kumar said...

Superb Explanation