Wednesday, June 28, 2006

ரியல் மியூச்சுவல் 'ஃபண்ட்'கள்!!

குப்புசாமி செல்லமுத்து

ஷேர் மார்க்க்ட்டில் முதலீடு செய்வதை விட ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதாக அறிகிறோம்.

பங்குச் சந்தையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட ஏதாவது வாங்க முடியும். ஆனால் ரியல் எஸ்டேட் என்று நினைக்கவே சில இலட்சங்கள் ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வு என ரியல் எஸ்டேட் மியூச்சுவல் நிதித் திட்டங்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.

சரியாக நினைவில்லை. இன்றும் கூட இது போன்ற திட்டங்கள் இயங்கி வருகின்றன. குறைந்த பட்ச முதலீடாகப் பல இலட்சங்கள் வேண்டுமென்கிறன விதிமுறைகள் இருக்கின்றன. ஆகவே, பெரும் சீமான்களுக்காக அவை அமைந்திருக்கின்றன.

இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange board of India - SEBI) சமீபத்தில் சிறு முதலீட்டாளர்களும் பங்கு கொள்ளும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. சராசரி பரஸ்பர நிதித்திட்டங்கள் போலப் பொதுமக்கள் அனைவரும் பங்குபெறும் வகையில் பணம் திரட்ட செபி அனுமத்துள்ளது. மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது இம்முடிவு.

இவ்வாறு வரவிருக்கும் திட்டங்கள் எந்த மாதிரி கட்டமைப்புப் பணீகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் செபி வரையறுக்கிறது. கட்டிடம், கட்டுமானம், தொழிற்பூங்காக்கள் போன்ற பெருமுதலீடு தேவைப்படும் project போன்றவற்றில் நேரடியாக அல்லது அது போன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களில் பங்குகளின் மூலம் மறைமுகமாகவோ இப்பணம் பாய்ச்சப்படலாம்.

எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறுகிற open-ended வழிமுறைகள் இவற்றில் இருக்காது. நீண்ட காலத்திற்கு முதல் அடைத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஏற்பாடு. அதே வேளை, அவை பங்குச் சந்தையில் பங்குகளைப் போல விற்க இயலுகிற ETF (Exchange Traded Fund) திட்டங்களாக இருக்குமென எதிர்பார்க்கலாம். நிதி நிர்வாக நிறுவனம் தினந்தோறும் நிகரச் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுத் தெரிவிகக் வேண்டும் எனவும் செபி வலியுறுத்தியுள்ளது.

அளவற்ற உள்கட்டுமானத் தேவை இருக்கிற நமது நாட்டில், அவற்றை பூர்த்தி செய்ய வெளிநாட்டு முதலீடுகளை முழுக்க முழுக்க நம்ப வேண்டிய தேவையை மேற்சொன்ன நடவடிக்கை ஓரளவு தணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

15 comments:

நன்மனம் said...

குப்ஸ்

//எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறுகிற open-ended வழிமுறைகள் இவற்றில் இருக்காது. நீண்ட காலத்திற்கு முதல் அடைத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஏற்பாடு.//

இந்த நிருவனங்கள் முழுக்க முழுக்க SEBI கட்டுப்பாட்டுல இருக்குமா? மற்றும் ஒரு (ஏமாற்றிய) தேக்கு மர வளர்ப்பு திட்டம் மாதிரி ஆகாமல் இருக்க என்ன பாதுகாப்பு அளிக்க போகிறது SEBI?

நாகை சிவா said...

நல்ல விசயமாக தான் தெரியுது. ஏதுவும் குறிப்பிட்ட கால அளவு கிடையாதா?
இது போன்றவற்றில் முதலீடு செய்தால், நம் நாட்டின் உள்கட்டமைப்பில் நம் பங்கும் கொஞ்சம் உள்ளது என்ற மனநிறைவு கிடைக்கும்.

Kuppusamy Chellamuthu said...

//தேக்கு மர வளர்ப்பு திட்டம் மாதிரி ஆகாமல் இருக்க என்ன பாதுகாப்பு //
நன்மனம்,
அப்படியெல்லாம் நடக்காது. சீட்டுக் கம்பெனிகள் ரேஞ்சுக்கு பரஸ்பர நிதிகளைப் பற்றிக் கவலைபடத் தேவையில்லை. மிக ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பில் இயங்குபவை இவை.

//ஏதுவும் குறிப்பிட்ட கால அளவு கிடையாதா?//
சிவா, Exchange traded close-ended funds ஏற்கனவே சில இருக்கின்றன. சமயத்தில் NAV மதிப்பை விடக் குறைந்த விலைக்கு நீங்கள் வாங்குவதற்குச் சாத்தியங்கள் உண்டு.

Anonymous said...

these are big time investment instruments in the US. welcome to india.

Sivabalan said...

குப்புசாமி செல்லமுத்து,

நல்ல செய்தி.

நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

நன்றி!.

பொன்ஸ்~~Poorna said...

இந்த நிதித் திட்டம் வந்துடுச்சா? வரப் போகுதா?
நம்மை மாதிரி சாதா பொது ஜனம் எல்லாம் இதுல கலந்துக்கும் அளவுக்கு பங்கு விலை குறையுமா?

ராபின் ஹூட் said...

குப்புசாமி சார், ரியல் எஸ்டேடில் முதலீடு என்பது எனக்கும் குழப்பமாகவே இருக்கிறது.
பரஸ்பர நிதி நிறுவனமே ரியல் எஸ்டேட் பிசினசில் நேரடியாகக் களத்தில் இறங்கப் போகிறதா?
அல்லது ரியல் எஸ்டேட் பிசினசில் இருக்கும் ceebrose போனற நிறுவனங்களில் முதலீடு செய்யப் போகிறதா?
அல்லது சொத்துக்களை வாங்கிவிட்டு ஓரிரு ஆண்டுகள் கழித்து அதிக விலைக்கு விற்று லாபத்தை பகிர்ந்தளிக்கப் போகிறதா?

சதயம் said...

ஏற்கனவே உள் கட்டமைப்புகளுக்கான NFO's அறிவிக்கப்பட்டு அவை நல்லமுறையில் தொடர்வதை காணலாம்.

இந்த முறை நமது சந்தைக்கு புதியது எனினும், வளர்ந்த சந்தைகளில் வெற்றி பெற்றிருக்கிறது, நமது சூழலுக்கேற்ப தெளிவான வழிவகைகள் வரையறுக்கப் படுதல் அவசியம்.

manasu said...

சதயம் சொன்ன மாதிரி, ஏற்கனவே இது போல NFO's இருக்கு தானே? (Birla sunlife infrastructure fund, and one relience i think).

பொன்ஸ்க்கு ஐடியா எதும் கொடுக்காதிங்க, சென்செக்ஸ் 8900 வந்தபோது கூட அவுங்க வாங்கிய பங்குகள் லாபத்தில் இருக்கதா சொல்லிருக்காங்க. பணம் ஒரே இடத்தில தங்கிரகூடாது.!!!

வாரன் பஃபெட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நியுஸ் பார்த்திங்களா?

நீங்க கேட்டதற்கு ஏற்ப குடும்ப குத்து விளக்கு நயன் தாரா படம் போட ஒரு செய்தி இருக்கு, ஆனா நம்ம சிபி அடிக்க வந்திருவாரோன்னு ஒரு தய்க்கம். இருந்தாலும் கோரிக்கை பரிசீலிக்க படும்.

Kuppusamy Chellamuthu said...

நன்றி சிவபாலன்.

பொன்ஸ், ராபின், சதயம் மற்றும் மனசு, உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் நன்றிகள்.

ஏற்கனவே இருக்கின்ற உள்கட்டமைப்பு நிதிகள் (Infrastructure funds) அந்தத்துறையில் இருக்கும் முதலீட்டு உபரகணங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டியிருந்தது. நேரடியாக அல்லது கூட்டு முயற்சியில் கட்டுமானப் பெரும்பணிகளை அவை செய்ய இயலாது.

ரியல் மியூச்சுவல் நிதிகளுக்கு அந்தக் கவலை இல்லை. ஒரு தொழில் பேட்டையை அவர்களே நிமாணிக்கலாம். அடுக்கு மாடிக்க்குடியிருப்பு ஏற்படுத்தும் நிறுவனத்துடன் கூடாகச் சேர்ந்து இயங்கலாம். அல்லது L&T மாதிரி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம். பெரிய இடத்தை வளைத்துப்போட்டு அதைப் பிரித்து விற்கவும் செய்யலாம்.

அதாவது நாமே ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதற்குப் பதிலாக நமது சார்பில் கூட்டமைப்பாக அதே வேலையை இவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான விளக்கங்கள் இன்னும் கிடத்ததாகத் தெரியவில்லை. கிடைக்கும் போது பரிமாறிக் கொள்வோம்.

மனசு.. நயனுக்குக் கோவில் கட்டும் உத்தெசம் வைத்திருப்பீர்கள் போலத் தெரிகிறது.

ரவி said...

கலக்கல். ராபின் குட் யானைக்கு எய்ம் பண்ற மாதிரி இருக்கு ;-)

பாவூரான் said...

//நிதி நிர்வாக நிறுவனம் தினந்தோறும் நிகரச் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுத் தெரிவிகக் வேண்டும் எனவும் செபி வலியுறுத்தியுள்ளது//

இது எவ்வாறு சாத்தியமாகும்.நிலத்தின் விலை, பங்குகளின் விலையைப்போல் தினமும் மாருவதில்லை. மேலும் பங்குகளின் இன்றைய விலையை அறிவது எழிது. இன்னுமொரு பிரச்சினை இது போன்ற ஒரு நிதியை நிர்வகிப்பவர்கள், நமது பணத்தைக்கொண்டு நியாயமான விலைக்குதான் சொத்து வாங்குகிறார்களா? என்று கண்டுபிடிப்பது எப்படி?

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ்க்கு ஐடியா எதும் கொடுக்காதிங்க, சென்செக்ஸ் 8900 வந்தபோது கூட அவுங்க வாங்கிய பங்குகள் லாபத்தில் இருக்கதா சொல்லிருக்காங்க. பணம் ஒரே இடத்தில தங்கிரகூடாது.!!!//
மனசு.. என்னத்தச் சொல்ல.. .உமக்கு நல்ல மனசு...

நயன்தாரா படம் ரெண்டு மூணு தேடிக் கொடுத்தா இந்த வேலையெல்லாம் விட்டுடுவீரோ?!! ;)

manasu said...

இன்னும் அண்ணியின் மயக்கத்தில் இருந்த்து விடுபடலயா???

குப்பண்ணா என்ன பதிவே காணோம்,,,,,,

//நயன்தாரா படம் ரெண்டு மூணு தேடிக் கொடுத்தா இந்த வேலையெல்லாம் விட்டுடுவீரோ?!! ;)//

நான் என்ன சிபியா???????

Anonymous said...

give elobrate news about this fund
Raveendran T