Friday, June 23, 2006

ஜகா வாங்கும் கம்பெனிகள்..

- குப்புசாமி செல்லமுத்து

சற்றே பழைய (4-5 நாட்கள்) செய்தி..

பங்குச்சந்தையின் பின்னடைவு காரணமாக இரண்டு நிறுவங்களின் IPO வெளியீடுகள் முழுதுமாக விற்கப்படாததால், அந்த நிறுவனங்கள் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன. அவை புளூபிளாஸ்ட் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் விக்னேஸ்வரா எக்ஸ்போர்ட் லிமிடேட்.

விக்னேஸ்வரா எக்ஸ்போர்ட் லிமிடேட் தனது விலைப் பட்டையை ரூ121-140 என்கிற அளவில் இருந்து ரூ110-124 என்கிற அளவாகக் குறைத்தது. அப்படி இருந்தும் 89% மட்டுமே விண்ணப்பங்கள் வந்தனவாம். இதனால் விரக்தியடைந்த நிறுவனம் வெளியீட்டு முடிவில் இருந்து பின்வாங்குகிறது. சுமார் 55-60 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்திருந்தார்கள் இவர்கள்.

அதே கதிதான் புளூபிளாஸ்ட் 'இன்டஸ்ட்ரீஸ்'க்கும். இவர்கள் திரட்டத் திட்டமிட்டிருந்தது ரூ30 கோடி. IPO திட்டம் தகர்ந்த பின்னர் வேறு வழிமுறைகளில் (கடன் பத்திரங்கள்) தனது விரிவாக்கத்திற்குத் தேவையான ரூ32 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது கம்பெனி.

ரிலையன்ஸ் பெட்ரோலியம் IPO விற்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்த தொகை ஒரு இலட்சம் கோடிக்கும் மேல். இரண்டே மாத இடை வெளிக்குப் பின் ரூ30 கோடி வெளியீடுகள் கூடத் திணறுகின்றன.

தயாராக இருக்கும் DLF, MCX மற்றும் மின் நிதி நிறுவனம் (Power Finance corporation) ஆகியவற்றின் முதல் பொது வெளியீடுகள் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகின்றன. ஏனென்றால், இவை வளரும் துறைகளில் முக்கியமான நிறுவனங்கள்...

14 comments:

செந்தில் குமார் said...

குப்ஸ்,

IPO-க்களில் மட்டுமே முதலீடு செய்யும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் என்னவாயின?

Kuppusamy Chellamuthu said...

//IPO-க்களில் மட்டுமே முதலீடு செய்யும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் என்னவாயின//

Good question... :-)

நாகை சிவா said...

ரிலையன்ஸ்கே இந்த நிலைமையா? பெட்ரோலியம் அனில் இடம் தானே இருக்கின்றது?

நன்மனம் said...

சிவா, ரிலையன்ஸ் பெட்ரோலியம் IPO க்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு லட்சம் கோடிக்கு மேல் வந்தது இப்ப மதவங்க நெலமய பாத்தீங்களானு குப்ஸ் சொல்றாருனு நெனக்கிறேன்.

மொதல்ல பாத்த உடன நானும் அப்படி தான் நெனச்சேன் அப்பறம் திரும்ப படிச்ச போது தான் தெரிஞ்சுது.

நாகை சிவா said...

நன்றி நன்மனம், நான் தான் தவறாக பொருள் கொண்டு விட்டேன். திருத்தியதற்கு நன்றி.

சதயம் said...

அதிக ஆசை...அதீத பயம் இவைதான் பங்கு வணிகத்தின் சாபக் கேடுகள்.

Sivabalan said...

இந்த IPO திரும்ப பெறக்காரனம் இன்றைய Share Market நிலையா? அல்லது அந்த கம்பெனியின் Balance Sheet காரனமா?

Kuppusamy Chellamuthu said...

சிவா, நான் சொல்லனும்னு நினைத்ததை நன்மனம் சொல்லிவிட்டார். ஒரு வேளை புரியாத மாதிரி எழுதிட்டேனோ?

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நன்மனம் & சதயம் சார்.
//அதிக ஆசை...அதீத பயம்// வெல் செட்..

சிவபாலன், நிறுவனத்தின் பின்னணி பார்த்து என்றைக்குப் பொது வெளியீடுகள் நடந்திருக்கின்றன? எல்லாம் மூடு மாறியதால் தான்..

Sivaprakasam said...

At last I got the right BLOG. A person watchng SENSEX movments at least 10 times upto 3;30 PM reached right blog.

Kuppusamy Chellamuthu said...

வருகைக்கு நன்றி சிவப்பிரகாசம். அபத்தமாக ஏதாவது இங்கே எழுதப்பட்டால் அதைச் சுட்டிக்காட்டுவீர்கள் என நம்புகிறேன். :-)

manasu said...

குப்பண்ணா இந்த விலைபட்டை எதை வைத்து நிர்ணயம் பண்றாங்க?

கொஞ்ச நாளாவே எல்லாம் ரொம்ப ஓவர்தான்.

Kuppusamy Chellamuthu said...

IPO வை நடத்திக் கொடுக்கும் படி நிறுவனம் தரகர் அல்லது வங்கி ஒன்றை/பலதை அணுகும். அப்படி அணுகப்படுகின்ற issue lead banks தான் விலைப்ட்டையை நிர்ணயம் செய்பவை. திரட்டப்படும் தொகையில் இவர்களுக்குக் குறிப்பிட்ட சதவீதம் உண்டு என்பதால், எவ்வளவுக்கு எவ்வளவு அதிக அளவில் விலைப்பட்டையை ஏற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக ஏற்றுவது இவர்கள் இயல்பு. சந்தையில் இருக்கும் டிமாண்ட் - சப்ளை சமன்பாடு, அதே துறையில் இருக்கும் பிற கம்பெனிகளின் விலை ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படும்.

உங்க கேள்விக்கு முழசாப் பதில் சொல்லிட்டேனா மனசு? இல்லேன்னு சொல்லுது என் மனசு, இருந்தாலும் ஒரு பின்னூட்டத்துல இவ்வளவு போதும்..

manasu said...

கேள்வி கேட்கும் போதே தெரியும் இது மறுமொழியில் முடிந்துவிடுகிற விஷயம் இல்லன்னு.

ஒரு ஐடியா கிடைச்சுடுச்சு.

முடிந்தால் ஒரு பதிவு போடலாமே குப்ஸ்.

பொன்ஸ்~~Poorna said...

//உங்க கேள்விக்கு முழசாப் பதில் சொல்லிட்டேனா மனசு? இல்லேன்னு சொல்லுது என் மனசு, இருந்தாலும் ஒரு பின்னூட்டத்துல இவ்வளவு போதும்//

:-)