Tuesday, June 06, 2006

பங்குச் சந்தை சரிவுக்கான(??) காரணங்கள்!!

- குப்புசாமி செல்லமுத்து

கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப்படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைத் தழுவும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது. அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் தினசரிப் பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன். விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம்.

"இன்னிக்கு ரத்தம் பாக்காம விட மாட்டாங்க போல இருக்கே!!" இப்படித்தான் சிறிய, பெரிய அளவில் முதலீடு செய்திருக்கும் அனைவரும் தினந்தோறும் புலம்புவது. சமீபத்தில் இந்தியப் பங்குச்சந்தை கண்ட வரலாறு காணாத சரிவுக்கான சில காரணங்கள் ஊடகங்கள் வாயிலாகப் பரவியிருப்பதைப் பெரும்பாலானோர் அறிவர். இருப்பினும் இன்னொரு முறை அவற்றில் சிலதை ஆராய்வோம்.

"அமெரிக்காவில் வட்டி வீதம் 25% அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. அதனால் உலக முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் செய்திருந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று, அமெரிக்க அரசின் கடன் பத்திரத்தில் இட்டு வைக்க விழைந்ததின் விளைவு தான் இந்தச் சரிவு." இந்தக் கூற்றில் உண்மை இருந்தாலும், 0.25% (100 அடிப்படைப் புள்ளி என்பது 1% ஆகும்) வட்டிவீதம் அதிகரித்தது தான் இதற்குக் காரணம் எனச் சொல்லிட இயலாது. அவர்கள் தொடர்ந்து 16 தடவை வட்டி வீதத்தை 0.25% உயர்த்தி வந்துள்ளனர். அதன் அடிப்படையில், இந்தியா முதலிய தேசங்களில் இருந்து பணம் படிப்படியாகத் தான் வெளியேறியிருக்கும்..பொருள்>> பங்குவிலை கொஞ்சம் கொஞ்சமாக பல மாத இடைவெளியில் இறங்கியிருக்குமேயொழிய, இப்போது நடந்தது போல அல்ல.

கடந்த மூன்று வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் சென்செக்ஸ் 81.9%, 40.5% மற்றும் 55.7% என்ற அளவில் வளர்ந்துள்ளதை அறியலாம். மூன்றாண்டு முதலீடு 377%மும், இரண்டாண்டு முதலீடு 197%மும், ஓராண்டு முதலீடு 81.9%மும் வளர்ந்துள்ளது. இவ்வளவு உயர்ந்த ஒரு சரக்கு 20% சறுக்கியது பெரிய சரிவாகத் தெரியவில்லை. சென்செக்ஸில் அங்கம் வகிக்கும் 30 நிறுவனங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டில் 25% த்தை விடச் சற்றே குறைவு. அதன் அடிப்படையில் சென்செக்ஸ் நியாயமாக அடைந்திருக்க வேண்டிய ஏற்றமும் அதே அளவில் இருந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 80% ஐ விட அதிகமாக விலை உயர்ந்ததால், குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் லாபத்தை அள்ளுவது எதிர்பார்க்கக்கூடியது தான். அப்படி அவர்கள் ஒட்டு மொத்தமாக விற்றது தான் சரிவு..

இடது சாரிகள், அரசின் தாராளமயமாக்கல் முடிவுகளில் அதிக நாட்டாமைத்தனத் தாக்கத்தை உண்டு செய்வதான இன்னொரு கருத்து. அட, அது ஒரு வாரத்தில் மட்டும் தெரிந்த திடீர் ரகசியமா என்ன? ஊரறிந்த ஒரு உண்மையல்லவா அது? இடது சாரிகள் அங்கம் வகிக்கும் ஒரு அரசு முதலாளித்துவத்தைப் பெருகச் செய்வதில் உள்ள சிக்கல்கள் அறியப்பட்டது தானே? அப்படியானால், விலை இந்த அளவிற்கு ஏறியே இருக்கக் கூடாதே!!!

முதல் நாள் 400 புள்ளிகள் தொலைந்து போன போது, "manufactured crisis" என மத்திய நேரடி வரி வாரியத்தின் சுற்றறிக்கை குறித்துக் கருத்துச் சொல்லி, அதேல்லாம் வதந்தி எனத் தெளிவுபடுத்தினார் மாண்பு மிகு நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்படிப்பட்ட manufactured crisis தான் சரிவுக்குக் காரணம் என வைத்துக் கொண்டால், அவரது தெளிவாக்கத்திற்குப் பின் சந்தை மேலேறி வந்திருக்க வேண்டுமே?

சென்ற ஒரு வருடத்தில் நிகழ்ந்த கிடுகிடு வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. ஆயிரக்கணக்கான கோடிகளை புது நிதி வெளியீடுகள் (NFO) மூலமாகத் திரட்டிய பரஸ்பர நிதி நிறுவனங்கள், அநியாய விலைக்குப் பங்குகளை IPO மூலம் வெளியிட்ட பேராசை முதலாளுகள், சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் உள்ளே நுழைந்த சிறு முதலீட்டாளர்கள், அவர்தம் அறியாமையைப் பயன்படுத்தி இரத்தம் உறிஞ்சிய தரகர்கள், ஆலோசகர்கள், பரஸ்பர நிதி விற்பனையாளர்கள், விலைகளைச் செயற்கையாக ஏற்றிப் பிடிக்கும் சில விஷம அங்கத்தினர் என அனைவரும் இதற்குப் பொறுப்பு.

பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட. Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".

போனது போகட்டும்.. பிரேதப் பரிசோதனை மாதிரி பிணத்தை திரும்பத் திரும்ப அறுத்து அசிங்கப் பட வேண்டாம். தவறுகள் சொல்லித் தரும் பாடம் விலை மதிப்பற்றது. சமீபத்தில் செய்த சில தவறுகளை மறுபடியும் செய்யாமல் பார்த்துக் கொள்வோமாக.

நீண்ட கால அடிப்படையில் வளமான எதிர்காலம் கொண்ட ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை. பத்து வருடத்தில் நான்கு மடங்காக அது ஏறுமென்றால், தற்காலிக 20% சரிவு குறித்து அதிகமாகக் கவலையுறவேண்டிய அவசியம் இல்லை. ஒரு வருடத்திற்கு விலை உயராவிட்டாலும் (அல்லது சரிந்து கொண்டே இருந்தாலும்), நீங்கள் வாங்கியிருக்கும் கம்பெனி சிறந்த முறையில் தொழில் செய்து, அதனைப் பெருக்கி வருமானால், உங்களுக்கென்ன கவலை?

பங்கு வாங்கி அடுத்த வாரத்திற்குள் விற்று பணம் சம்பாதிக்கும் ஆசையில் சில இலட்சங்களைக் கடன் வாங்கியிருந்தால் தான் சிக்கல்.

இது போன்ற தருணங்களில் கவனமாக இருக்க வேண்டிய சில தெளிவான குறிப்புகளை இன்னொரு பதிவில் விவாதிக்கலாம்.வளம் பெறுவோம்.

31 comments:

பொன்ஸ்~~Poorna said...

//பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட.//

எங்க போனாலும் இதைச் சொல்லிடறீங்க!!.. :)

எப்படியோ, பங்கு சந்தை ஒன்றும் லாட்டரி சீட்டு மாதிரி இல்லை.. நம்ம உழைப்பும் கொஞ்சம் இருக்கணும்.. அவ்வளவு தான்..

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ்.. முத்துவின் பதிவில் இட்ட பின்னூட்டத்தை எடுத்து, அதை விரிவு படுத்தித்தான் இந்தப் பதிவு எழுதப்பட்டது. அதனால், அங்கே கண்ட அதே வாசகங்கள் இங்கும் இருக்கும் :-) ஸ்மைலி போட்டுக்கறேன் பிளீஸ்..

Anonymous said...

miga nerthiyana pathivu.. thodaratum umathu pani. ondru solli kolla virumbukiren. vaanilai arikai kuda nambividalam, aanal indha security agency tharum recommendations mattum nambi yemanthu vidavendam. entha oru companiyil muthilidu saiyum mun naamagavae aarayindu saithal adi avalo namakku vilaathu.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

"சந்தை"ன்னு வந்துட்டாலே ஒரு நாள் வித்த வெங்காயம் மறுநாள் அதே விலை விக்காது என்பது புண்ணாக்குக்குகூடத் தெரியும். ஏன் இந்த பங்குச் சந்தைப் புலிகளுக்குத் தெரியவில்லை. ம்ம்... எல்லாம் ஆசைதான்.


//பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட. //

சரியாச் சொன்னீங்க.

அஞ்சல் அலுவலகத்தில் போட்டு வைக்கும் சேமிப்புக்கு ஈடு இணையில்லை என்று என் அப்பா சொல்றார். காளை செத்தா என்னா? கரடி பூட்டா என்னா? குறைந்த வட்டி போதும் என்று இல்லாமல் இப்படி எல்லாம் லோல் படணுமா?

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

அப்புறம் போன தடவை பொன்ஸ் மாதிரி ID Card ஐ தொங்க விடுறவங்கள கலாச்சீங்க ..இப்ப Tie பார்ட்டிகளா.

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து!

உண்மைதான் அதிக ஆசை அதிக நஷ்டம். நல்ல பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் மீண்டு வரலாம் அநாமத்து நிறுவன பங்குகளில் போட்ட பணம் எள் தான்! இதில் பெரிய கவலைக்குறிய அம்சம் என்னவெனில் தற்போதெல்லாம் வி.ஆர்.எஸ், பணி ஓய்வு பெற்று வரும் பணத்தை கூட சிலர் அடுத்தவர் பேச்சை கேட்டு பங்கு வணிகம் பற்றிய லவகேசம் அறிவு கூட இல்லாமல் முதலீடு செய்கிறார்கள் அவர்கள் கதி என்னவாகி இருக்கும் என கற்பனை செய்யவே முடியவில்லை!

Kuppusamy Chellamuthu said...

அனானி, //vaanilai arikai kuda nambividalam, aanal indha security agency tharum recommendations mattum nambi yemanthu vidavendam.// சரிதான் நீங்கள் சொல்வது. "வானிலை ஆய்வாளர்கள் இருப்பதால் தான் ஜோதிடர்கள் மேல் நமக்கு மரியாதை பிறக்கிறது" என ஒரு நண்பர் சொல்வார். ஆனா நீங்க சொல்றீங்க, "பங்கு ஆய்வாளர்கள் இருப்பதால் தான் வானிலை ஆய்வாளர்கள் மேல் நமக்கு மரியாதை பிறக்கிறது".

கல்வெட்டு, நீங்க தமாஷாகச் சொன்னாலும், அதுல சரக்கு இருக்கு. கிண்டி குதிரை ரேஸ் நடக்கும்போது பாத்தவங்க யாராவது இருக்கீங்களான்னு தெரியல. ரேஸ் நடக்குறதுக்கு முன்னாடி, பந்தயக்காரப் பயலுக எவ்வளவு ஆராய்ச்சி பண்றாங்க தெரியுமா? எந்தக் குதிர எப்படி ஓடுச்சு, எப்ப எப்ப சாணி போட்ட்ச்சு etc மேட்டர் எல்லாம் ஆராய்வாங்களாம். சூதாட்டத்துக்கே இவ்வளவு ஆராய்ச்சின்னா, முதலீட்டுக்கு??

//அப்புறம் போன தடவை பொன்ஸ் மாதிரி ID Card ஐ தொங்க விடுறவங்கள கலாச்சீங்க ..இப்ப Tie பார்ட்டிகளா.// பாத்துங்க. அவுக சங்கத்துல இருந்து கும்பலாக் கிளம்பி வந்து அடிக்கப் போறாங்க. பொன்ஸ் சங்கம் இல்லீங்க, டை பார்ட்டிங்க சங்கம்!!

Anonymous said...

Kuppusamy kooda tie katti irukkarrnnu kelvi patten..parthunga kalvettu ethukkum konjam echcharikkaiyakave irunga...entha puthulla entha panbooo :-)).

பொன்ஸ்~~Poorna said...

//Kuppusamy kooda tie katti irukkarrnnu kelvi patten..parthunga kalvettu ethukkum konjam echcharikkaiyakave irunga...entha puthulla entha panbooo :-)). //

அவரு ஐடி கார்டு மாட்டிகிட்டு சுத்தும் பார்ட்டின்னும் கேள்விப் பட்டேன்.. கல்வெட்டு, Careful sir... !!! :)))

Kuppusamy Chellamuthu said...

//தற்போதெல்லாம் வி.ஆர்.எஸ், பணி ஓய்வு பெற்று வரும் பணத்தை கூட சிலர் அடுத்தவர் பேச்சை கேட்டு பங்கு வணிகம் பற்றிய லவகேசம் அறிவு கூட இல்லாமல் முதலீடு செய்கிறார்கள் // ஆமாங்க வெளவால். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் தன் PF தொகை முழுதும் பங்கில் போட்டதோடு, அதைவிட ஐந்து மடங்கு கடன் வாங்கி வேறு 'டிரேட்' செய்தாராம். இப்போது, அடைந்த நஷ்டத்தை ஈடுகட்ட தனது வீட்டை விற்று இருக்கிறார் அவர். அண்மையில் செய்தித்தாளில் வந்த செய்தி இது. வெளிவராத செய்திகள் நிறைய இருக்கும். மிக வேதனையாக உள்ளது.

அனானி, வாழ்க்கைல மூனு தடவை தாங்க டை கட்டியிருக்கிறேன்.
//சங்கத்துல இருந்து கும்பலாக் கிளம்பி வந்து அடிக்கப் போறாங்க. பொன்ஸ் சங்கம் இல்லீங்க, டை பார்ட்டிங்க சங்கம்!!// எனக் கூறியது நான் உங்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை அல்ல; நாம் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை. :-)

அம்மா பொன்ஸ்ஸ்சூ.... பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கப் போற மாதிரி இருக்கு நீங்க சொல்றது. ஒரு விவரம் சொல்லட்டுமா? இப்பல்லாம் ICICI பேங்க் ஊழியர்கள் எல்லாம் டையும் கட்டிக்கிட்டு, ஐ.டி.கார்டும் தொங்க விட்டுக்கிட்டு இருக்காங்க.. அவங்கள எதில சேக்கறது?

செந்தில் குமார் said...

//"இன்னிக்கு ரத்தம் பாக்காம விட மாட்டாங்க போல இருக்கே!!" //
அருமையான ஒரு பார்வை (Observation). இந்த இரத்தக்களரியிலும் GUN-ஆக நிற்பவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்! காயப்பட்டு மற்றவர்கள் கீழே போடும் ஆயுதங்களையும் பயன்படுத்துபவர்கள் போரில் வெற்றியினை நிச்சயம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!!

செல்வன் said...

எனக்கு தோன்றுவது என்னவென்றால் பங்குகளை விற்று காசுபார்க்க இது நல்ல சமயம்.நீங்கள் warren buffet style முதலீட்டாரளராக இல்லமலிருந்தால்.வாங்குவதை பற்றி கனவு கூட செய்ய வேண்டாம்.

(பொதுவான கருத்து இது.பங்கை பொறுத்து தான் உண்மையான மதிப்பை கணிக்க முடியும்..)

மற்றபடி சிதம்பரம் பேச்சை கேட்டு பங்கு வாங்குவது மளிகை கடைக்காரனிடம் கருத்து கேட்டு பொருள் வாங்குவது போல்தான்.எந்த நிதி அமைச்சரும் முதலீடு செய்ய இது சரியான சமயமல்ல என சொல்ல மாட்டார்.

Vaa.Manikandan said...

சில விஷயங்கள் எனக்கு புரிபடுவதில்லை. சரி பெரிய மனுஷர்கள் விஷயமா இருக்கும்னு விட முடிவதில்லை. இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்தா பரவாயில்லைனு தோணுது. வால் பிடிக்கற மாதிரி மெதுவா படிச்சுட்டு வந்தா கடைசி பத்தியில் நிற்கும் போது முதல் பத்தியை கோட்டை விட்டுவிடுகிறேன். இரண்டாக உடைத்து எழுதினால் கூட தேவலையோ எனத் தோன்றுகிறது. என்னைப் போன்ற மரமண்டைகளுக்காக!!

Udhayakumar said...

//போனது போகட்டும்.. பிரேதப் பரிசோதனை மாதிரி பிணத்தை திரும்பத் திரும்ப அறுத்து அசிங்கப் பட வேண்டாம். தவறுகள் சொல்லித் தரும் பாடம் விலை மதிப்பற்றது. சமீபத்தில் செய்த சில தவறுகளை மறுபடியும் செய்யாமல் பார்த்துக் கொள்வோமாக.

நீண்ட கால அடிப்படையில் வளமான எதிர்காலம் கொண்ட ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை//

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு.

யாரு எழுதுனதுன்னு மறந்து போச்சு, வேணும்னா கொஞ்ச நாளா வெண்பா வடிக்காம சாதம் வடிக்கும் ஆற்றலரிசி (எழுத்துப் பிழை இல்லை) கிட்ட கேட்டுக்கங்க...

Udhayakumar said...

////அப்புறம் போன தடவை பொன்ஸ் மாதிரி ID Card ஐ தொங்க விடுறவங்கள கலாச்சீங்க ..இப்ப Tie பார்ட்டிகளா.// பாத்துங்க. அவுக சங்கத்துல இருந்து கும்பலாக் கிளம்பி வந்து அடிக்கப் போறாங்க. பொன்ஸ் சங்கம் இல்லீங்க, டை பார்ட்டிங்க சங்கம்!! //

ஏதோ உள்குத்து மாதிரி தெரியுது... எங்களை சொல்லலைன்னு நம்பரேன்...

manasu said...

sri lanka, south africa, pakistan னு சுற்றி சுற்றி ஜெயிச்ச இந்தியா இப்ப வெஸ்ட் இண்டீஸ் ல வாங்குற அடி மாதிரி உச்சிக்கு போன சென்செக்ஸ் இப்ப பாதாளம் தேடிட்டு இருக்கு....

நம்மகிட்ட கழுத்துல டையோ ஐடி கார்டோ இல்ல பொன்ஸ் மாதிரி தங்கமும் கொட்டல....

நீண்டகால முதலீடுதான்.... ஹ்ம்ம் பார்ப்போம்....

குப்புசாமியண்ணன் எப்படி???

Kuppusamy Chellamuthu said...

வாங்க செந்தில்குமார். நீங்கள் சொல்வதைக் கண்டால் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல், வெளியே இருந்து வேடிக்கை பார்த்தவர் மாதிரித் தெரிகிறது :-). Unless you are some one who heavily relied on put options and short-futures, you were destined to see some of your wealth vanish!!

//மற்றவர்கள் கீழே போடும் ஆயுதங்களையும் பயன்படுத்துபவர்கள் போரில் வெற்றியினை நிச்சயம் வெல்வார்கள் // இது சரியான பார்வை. சென்செக்ஸ் 9000ங்களின் மேல் பகுதியில் இருந்தாலும், பல பங்குகள் குறியீடு 6000த்தில் இருந்தபோது கிடைத்த அதே விலைக்கு இன்று கிடைக்கின்றன. BSE-sensex 30 நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் சென்செக்ஸை விட வேகமாகக் கீழிறங்கி வந்துள்ளன. சீப்பா வாங்கிப் போட வாய்ப்புகள் பலவாறாகக் கிடக்கின்றன.

செல்வன்: பலதரப்பட்ட உலக விஷயங்களைக் குறித்தான உங்கள் பார்வையை (பதிவு & பின்னூட்டம்) வாயிலாகப் பார்த்திருக்கிறேன். இதுவும் ஒரு தெளிவான பார்வை என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

Kuppusamy Chellamuthu said...

சோக்கா சொன்னீங்க உதயகுமார்.... 'கொக்கொக்க' ன்னு வள்ளுவர் கூட எழுதிட்டுப் போயிருக்கார்.
நீங்க படுத்துற பாட்டுல ஆற்றலரிசி கொதிச்சுப் போய் இருக்காங்களாம்!! கொதிச்சுக் கொதிச்சு ஒரு நாள் சாதமாகப் போறாங்க. (அய்யோ சாமி ..இதுல உள் குத்தெல்லாம் இல்லை. உதய முனிவர் யாரச் சொல்றீங்கங்கறதே குத்துமதிப்பா யூகிச்சுத்தான் இதக் கிறுக்கறேன்)

ID card ஆசாமிகளைக் குறித்தான வரிகள் சென்ற பதிவில் இடம்பெற்றவை. அதற்கான விளக்கம்(??) அங்கே இடம் பெற்றுள்ளது. கல்வெட்டுக்காரர் பொன்ஸ் அம்மையாரின் காலை வாரி விடுவதற்காகச் சந்துல பாடிட்டார் ஒரு சிந்து :-) இதுலயும் உள்குத்து கிடையாது.

மனசு அப்பப்பத் தான் பேசும்..ஆனா சரியாப் பேசும். btw, sensex is only a barometer and does not necessarily reflect the portfolio of an individual.

-குப்புசாமி செல்லமுத்து

Kuppusamy Chellamuthu said...

மணி..//இரண்டாக உடைத்து எழுதினால் கூட தேவலையோ எனத் தோன்றுகிறது.// உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. திருத்திக்கொள்ள விழைகிறேன்.

-குப்புசாமி செல்லமுத்து

Murthi said...

நான் குப்புசாமியின் கருத்துக்களை முழுவதுமாக ஆதரிக்கிறேன்.எதெற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லும் குணம் என்றுதான் நம்மை விட்டுப்போகுமோ தெரியவில்லை.கடந்த 6 மாதங்களாக சந்தை சக்கை போடு போட்டபோது வாய் திறக்காதவர்கள் இப்போது குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார்கள்.பங்கு சந்தை விலைகளும் காய்கறி விலைகள் போலத்தான் என்பது பலருக்கும் புரிவதில்லை.

பி.கு. இந்தச் விலைச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

ப்ரியன் said...

பங்கு வர்த்தகத்தில் புகாமல் கவனித்து நல்ல சமயம் பார்த்து நிற்கும் எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்தன நன்றி!

"நீண்ட கால இன்வெஸ்ட்மெண்ட்" க்கு சரியான தருணம் இது என நினைக்கிறேன் உங்கள் கருத்து என்ன?

Kuppusamy Chellamuthu said...

மூர்த்தி மற்றும் ப்ரியன், உங்கள் வருகைக்கு நன்றிகள்.

//இந்தச் விலைச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்// இதெல்லாம் சொல்ல வேண்டியது இல்லை. இந்தச் சரிவில் பாதிக்கப்படாமல் யாரவது இருந்தால் அது தான் செய்தி :))

//"நீண்ட கால இன்வெஸ்ட்மெண்ட்" க்கு சரியான தருணம் இது என நினைக்கிறேன் உங்கள் கருத்து என்ன?// மேட்டர் என்னன்னே தெரியாம இன்வெஸ்ட் பண்றவங்களுக்கு சரியான தருணம் என்றுமே கிடையாது. ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்ய வாழ்த்துகள்!!
கவனித்து நல்ல சமயம் பார்த்துக் காத்திருந்த உங்கள் பொறுமைக்கு எனது பாராட்டுகள். கவனத்துடன் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதற்கு முன்பை விட இப்போது வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் படுகிறது.

FII வெளியேற்றத்தால் சந்தை சரிந்தது உண்மை என்றாலும், நேற்று அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். விற்றது பரஸ்பர நிதி நிறுவனங்கள்; காரணம் redemption pressure. சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் அருகாமையில் இருப்பதாகத் தெரியவில்லை.

Anonymous said...

nama invest pannina ellam pannamum losnna then who are all profitted out or where the money is distributed?? (I asked this question bcz I know only one logic profit = loss i.e if there is a losser there should be a gainer right)

ராபின் ஹூட் said...

நீண்ட கால முதலீட்ற்கு இன்னும் சிறிது காலம் காத்திருங்கள். சந்தை அதன் இயல்பான(உண்மையான) விலைக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் திரும்பிவிடும். பிறகு பங்குகளை வாங்குங்கள். பேராசை கொண்ட இந்திய முதலீட்டாளர்களுக்கு இந்த சரிவு விலையுயர்ந்த ஒரு பாடம்.

Kuppusamy Chellamuthu said...

அனானி.. கேட்டீங்களே ஒரு கேள்வி.

//nama invest pannina ellam pannamum losnna then who are all profitted out or where the money is distributed?? (I asked this question bcz I know only one logic profit = loss i.e if there is a losser there should be a gainer right)//

முதலீடு என்ற வார்த்தையை மறந்து, டிரேட் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டாலும் profit = loss சரியான லாஜிக் அல்ல.
profit + broker charge + tax = loss என்பதே சரியான வாய்ப்பாடு :)

ஆனால், இது கோயம்பேடு சந்தையில் வாழைக்காய் வாங்கி விற்கும் (முழுக்க முழுக்க) வர்த்தகம் மட்டுமே இல்லை. உங்கள் தந்தை 10 வருடத்திற்கு முன் வேளச்சேரியில் ஒரு கிரவுண்ட் 10,000 ரூபாய்க்கு வாங்கினார். போன வருடம் அதன் சந்தை மதிப்பு 10 லட்சம். இன்று 7 லட்சத்திற்கு விறபனையாகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இதிலே யாருடைய லாபத்தை யார் தூக்கிச் சென்றது? பெரிய கம்பெனி எல்லாம் வேளச்சேரில இடம் வாங்கிட்டு, இப்போ விக்கறாங்க. அதனால் உங்க அப்பாவுக்கு நஷ்டமா?? interesting ..aahaa?

Kuppusamy Chellamuthu said...

//சந்தை அதன் இயல்பான(உண்மையான) விலைக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் திரும்பிவிடும்.//

ராபின், ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்க !!

Anonymous said...

நன்றீங்க குப்புசாமி ஆனா வேளச்சேரியில் எங்க அப்பா எந்த கிரவுண்டும் வாங்களீங்க:-(!
your trade logic is good!so its profit for my dad but it may be loss if the time of buy varies..sarithana??

Sivabalan said...

குப்புசாமி செல்லமுத்து,

இப்ப அமெரிக்க சந்தையும் மிக பெரிய சரிவை சந்திச்சுட்டு வருகிறது. (இது பல மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட மிக பெரிய சரிவு).

இதுல அரசியல் இருப்பதாக சில ரேடியோக்கள் சொல்கின்றன.

ஏன்னா, இங்கே நவம்பர்ல Mid Term Election for US Congress நடக்கப்போகிறது. அதனால், Democrats சாதகமாக ஒரு நிலையை உருவாக்க முயற்சி நடக்கறதா சொல்கிறார்கள். ஏற்கனவே BUSH -Approval rating மிக குறைவாக உள்ளார்.

ஆனால் இன்று Iraq - Abu Musab al-Zarqawi, the al-Qaida leader கொலைசெய்யப்பட்டதையடுத்து Republicans கை ஓங்கும் என நினைக்கிறேன்.

இதுக்கும் இந்திய சந்தைக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் நவம்பர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்க சந்தை நல்ல நிலைக்கு வரும் என்கிறார்கள்.

அப்படி என்றால் இந்திய சந்தையிலும் மாற்றம் வருமா?

Anonymous said...

இந்த சரிவு மற்ற வியாபாரங்களை பாதிக்குமா??
I feel that some people ( people who are expecting more profit within short term) will try to move their investments from share market to some others may be real estates but in the current situation some people (who are expecting profit in long run) willl keep their investments as such and expecting the market to return to normal!!
In considering all these factors, how far this crash will effect the other business???

Kuppusamy Chellamuthu said...

சிவபாலன், உங்களுடைய கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.

//இதுக்கும் இந்திய சந்தைக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.// Not easy to answer :-) Sorry for the reply in English though.

If the results of the mid term election can bring in some legislation against outsourcing, then probably Indian companies doing business in these areas will take a hit. But, corporate leaders are so powerful in US (be it India or anywhere else) that any government could not act against the interests of corporate America. After all they fund the parties. Other thing is the flow of money into Indian market in the form of investment. Liquidity alone can not keep any market up. As long as Indian companies continue to put up a good show, there is no reason to bother about FIIs. They would be left with choice but to invest in India if our companies seduce them.

Having said that, it is also prudent for me to accept that these factors are too 'macro' for me. Interest rate, inflation, global factors etc have a certain say in the stock market which at any cost should not be ignored. This is what is known as systematic risk, the risk for the entire system. I prefer to focus more on the individual company, its business and corresponding risk which form unsystematic risk.

Sivabalan said...

Kuppusamy Chellamuthu,

It is good reply indeed.

As you said Corporate sector is vital.

We will hope for the best.

Thanks