Sunday, June 18, 2006

நான் அடிக்கும் சிக்சர்(6)..

-குப்புசாமி செல்லமுத்து

தனது 'ஆறு' பதிவில் பொன்ஸ்.. என்னை அழைத்திருந்தார். தனக்குப் பிடித்த ஆறு விஷயங்களை விவரித்தும், விரும்பும் ஆறு பதிவர்களை இதே போல அழைத்தும் எழுதவேண்டும் என்பது ஆட்டத்தின் விதிமுறை.

  • ஸ்ரீதேவி சிரிப்பு முதல், நமீதா இடுப்புவரை இரசித்த பெண்கள்...
  • கொழாப்புட்டு முதல் கோழிக்கறி வரை சுவைத்த உணவுகள்....
  • அமராவதி முதல் ஆம்ஸ்டெல் நதிவரை பார்த்த இடங்கள்...

பதிவு போட ஆசை தான். இருப்பினும் வேறு அறுவரை அழைப்பது என்பது இயலாத காரியமாகப் படுகிறதாகையாலும், விளையாடத்தெரியாத ஆட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி காரணமாகவும், விதிமுறைகளைச் சற்று மாற்றி நானே ஒரு தனியாட்டம் போட முடிவு செய்து விட்டேன். பொன்ஸ் பொறுத்துக் கொள்வாராக.

நான் இரசித்த, இன்னும் தொடர்ந்து இரசிக்கின்ற ஆறு முதலீட்டாளர்களை இந்தப் பதிவில் இரு சிறு அறிமுகம் செய்துவிடுவது சுலபம் எனப் பட்டதால், அது தான் ஆட்டத்தின் ரூல்ஸ்.

1. வாரன் பஃபட் (warren Buffett)

பஞ்ச் டலயாக் : Risk comes from not knowing what you're doing

பிறப்பு : 1930, ஒமாஹா, நெப்ராஸ்கா மாகாணம், அமெரிக்கா

* நடிப்புக்கு சிவாஜி என்றால், முதலீட்டிற்கு வாரன்.
* அவரது 'பிராண்ட்' முத்திரையைக் குத்தி எதை எழுதினாலும் விற்றுத் தீர்ந்து விடுவது வாடிக்கை.
* இவர் 1965 ஆம் ஆண்டு அப்போது நலிந்திருந்த Berkshire Hathway நிறுவனத்தைக் கையில் எடுத்த சமயத்தில் அதன் பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய மதிப்பு சுமார் 50 மில்லியன் (5 கோடி). அதே 1965 இல் அதே பத்தாயிரத்தை S&P குறியீட்டில் முதலிட்டிருந்தால் அது வெறும் ஐந்து இலட்சமாகத் தான் வளர்ந்திருக்கும்.
* 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துச் சேர்த்து வைத்திருந்தாலும் தான் இறந்த பின் அதன் பெரும்பகுதி அனாதைகளுக்குப் போய்ச் சேருமாறு உயில் எழுதியிருக்கிறார்.
* ஒமாஹாவின் முனிவர் (Oracle of Omaha) எனப் பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர்.
* 40 ஆண்டுகளுக்கு முன் முப்பதாயிரம் டாலருக்கு வாங்கிய அதே வீட்டில் இன்னும் வசித்து வருகிறார்.
* ஒழுக்கம், கட்டுப்பாடு, பகுத்தறிதல், பொறுமை ஆகியவற்றைப் போதிப்பதோடு நில்லாமல், கடைபிடித்துக் காட்டியவர்.
* 1990 களின் இறுதியில் சகட்டுமேனிக்கு ஏறிய 'டெக் & டாட் காம்' கம்பெனிகளைத் தவிர்த்த வெகு சில முதலீட்டாளர்களில் தலையாயவர்.
* ஆங்கிலத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள். You might be an atheist; but when it comes to investing Warren is your god
* பங்குதாரகளுக்கு அனுப்பும் ஆண்டறிக்கையில் இவர் எழுதும் கருத்துக்கள், நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் அளவிற்குப் பிரபலம்.


2. ஜார்ஜ் சோரஸ் (George Soros)

பஞ்ச் டயலாக்: "It's not whether you're right or wrong that's important, but how much money you make when you're right and how much you lose when you're wrong."

பிறப்பு : 1930, புடாபெஸ்ட், ஹங்கேரி

* சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல ஆரம்பித்தது இவர் வாழ்க்கை.
* டவுசர் போட்ட காலத்தில் ஹிட்லரின் இனவெறிப் படைகளுக்குப் பயந்து பதுங்கு குழியில் ஒளிந்து வாழ்ந்த ஹங்கேரி யூதச் சிறுவன் ஜார்ஜ்.
* இங்கிலந்தில் அகதியாகத் தஞ்சம் புகுந்து, அங்கே பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்கா வந்தவர்.
* வாரன் பஃபட் பேட்டிங் திராவிட் பாணி என்றால், ஜார்ஜுக்கு சேவாக் பாணி.

* 'விலை இறங்கும் முன் விற்க வேண்டும்' எனப் பலர் நினைப்பர். ஆனால் சோரஸ் விற்றதால் மட்டுமே விலை இறங்கிய காலமெல்லாம் உண்டு.
* ஷேர் மார்க்கெட் தவிர்த்து, நாணயம், தங்கம் என இவர் தொடதே இடமே இல்லை.
* ஜான் மேஜர் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் பிடிட்டிஷ் நாணயமான 'பவுண்ட்' ஐ விற்று ஒரு பில்லியன் டாலர் (ரூ4,500 கோடி) எடுத்தவர்.
* இவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக ரஷ்யப் பங்குச் சந்தை ஒரு மணி நேரத்தில் 12% சரிந்தது எனக் கூறுவார்கள்.
* சோரஸ் ஆரம்பித்த குவாண்டம் நிதியில் (quantum fund) 1969 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் இட்டிருந்தால் 1994 இல் அது 1,500 ரூபாயாகப் பெருகியிருக்கும்.


3. பீட்டர் லிஞ்ச் (Peter Lynch)

பஞ்ச் டயலாக்: Go for a business that any idiot can run - because sooner or later, any idiot probably is going to run it.
பிறப்பு : 1944 அமெரிக்கா

* 1978 இல் இவரது Fidelity Magellan Fund நிதியில் ஒரு ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 1990 இல் அது 700 ரூபாயாகத் திரும்பக் கிடைத்திருக்கும்.
* 46 வயதில் ஓய்வு தாமாக விரும்பி ஓய்வு பெற்ற மனிதர்.
* உலகின் மிகப் புகழ் மிக்க மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகளில் ஒருவர்
* அப்போதைக்கு எது சிறப்பாக இருக்கிறதோ அதில் முதலீடு செய்து காலத்திற்குத் தக மாற்றிக் கொள்வதால் இவரைப் 'பச்சோந்தி' என்று கூடக் குறிப்பிடுவார்கள்.
* இவர் எழுதிய One upon Wall street புத்தகம் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு.

4. ஜான் டெம்பிள்டன் (John Templeton)

பஞ்ச் டயலாக்: The time of maximum pessimism is the best time to buy and the time of maximum optimism is the best time to sell

பிறப்பு : 1912 டென்னிசி, அமெரிக்கா

* டெம்பிள்டன் குழுமத்தைத் துவங்கியவர்.
* உலக மியூச்சுவல் ஃபண்ட்களில் தந்தை என அறியப்படுபவர்.
* உலகப்போர் நடந்த சமயத்தில் வங்கியில் எவ்வளவு கடன் கிடக்குமோ அவ்வளவு கடன் வாங்கி, ஒரு டாலருக்குக் குறைவாக விற்ற அத்தனை ஷேர்களையும் வாங்கிய இருபது(கள்) வயதுத் துணிச்சல்காரர்.
* நான்கு வருடத்தில் அது நான்கு மடங்கானது அதன் பின்னர் சரித்திரமாகிப் போன சங்கதி.
* இவரிடத்தில் 65 ஆயிரம் டாலர் கொடுத்துவைத்த லெராய் என்பவர், நாற்பது வருடத்திற்குப் பின் 3.7 கோடி டாலராகத் திருப்பிப் பெற்றாராம்.


5. ராகேஷ் ஜுஞ்சுன்வாலா

பிறப்பு: 1960, மும்பை, இந்தியா

* படித்தது CA, வெளிநாடு சென்று ஆடிட்டர் வேலை பார்க்காமல், 1985 ஆம் ஆண்டு ரூ5,000 த்துடன் மும்பைப் பங்குச் சந்தையில் நுழைந்தவர்.
* ஐந்தாயிரம் இன்று பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி நிற்கிறது.
இருந்தாலும் உண்மையான சொத்து மதிப்பினை மீடியாவிற்குச் சொல்வதில் இவருக்கு விருப்பம் இல்லை.
* இவர் கால்பதித்த போது 150 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இன்று 10,000 புள்ளிகளில், கிட்டத்தட்ட 70 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், அண்ணாச்சி பல ஆயிரம் மடங்கு தன் பணத்தைப் பெருக்கியுள்ளார்.
* BSE சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த சமோசா விற்பவரை இன்னும் நினைத்துப் பார்க்கிறார்.
* இந்தியாவில் பங்கு முதலீட்டைப் புரிந்து கொண்டு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ராகேஷ் முன் மாதிரி எனச் சொல்லலாம்.


6. நீயோ, நானோ??

பெஞ்சமின் கிரகாம் போன்ற சிலர் இன்னும் இருந்தாலும், ஆறாவது யார் ரசிக்கப்படவேண்டும்? நம்மில் ஒருவர்..

35 comments:

சதயம் said...

அந்த ஆறாம் இடத்திற்கு வர ஆசைதான்....நிறைய இழக்க வேண்டியிருக்கும்....ம்ம்ம்ம்....பார்ப்போம்

பரஞ்சோதி said...

இது தாங்க உண்மையான சிக்ஸர்.

அருமையான பதிவு. ஜாம்பவான்களைப் பற்றி அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி.

- பரஞ்சோதி

Anonymous said...

Charlie Munger aa vittutenga?? athea mathir benjamin pathiyum yeluthunga kups, you have got an interesting writing style.

--
Jagan(KonguNadu)

manasu said...

ஜான் மேயர்?? ஜான் மேஜர்??

நம்ம ஹர்ஷத் மேத்தா பற்றியும் சிறு குறிப்பு வரைந்திருக்கலாம்.

நமீதா இடுப்புவரை இரசித்த பெண்கள்...

அடடா எழுதியிருக்கலாம்!!! பங்கு சந்தை மாதிரி ஏற்ற இறக்கம் உள்ளது தானே..ஹி....ஹி

வாரன் மட்டும்தான் கேள்விப்பட்டவர், மற்ற அறிமுகத்திற்கு நன்றி

வவ்வால் said...

குப்புசாமி செல்லமுத்து ,

உங்கள் சிக்சரை நான் எல்லை கோட்டில் பிடித்து விட்டேன் ,எல்லைக்கோட்ட தாண்டாமல் பிடித்தேனா என மூன்றாவது நடுவரை கேட்டு சொல்லுங்க :-))

Techie.... said...

குப்புசாமி,

கலக்கிட்டீங்க.....உண்மையிலேயே இதுதான் அருமையான ஆறு.


-ராம்.

Smooth Talk said...

தன்னடக்கம் காரணமாக குப்புசாமி செல்லமுத்துவை விட்டுவிட்டீர்களோ?? :-) எனினும் சிறந்த பதிவிற்கு நன்றிகள்

மஞ்சூர் ராசா said...

ஐந்து பேரையும் ஆறாவதாய் யார் என்ற கேள்வியும் அருமை.

விவரங்களும் தெளிவு.

நன்றி.

SK said...

மிக உபயோகமான அறிமுகங்கள்!
ரசித்துப் படித்தேன்!
நன்றி!

Kuppusamy Chellamuthu said...

//அந்த ஆறாம் இடத்திற்கு வர ஆசைதான்....//
அய்யா சதயம், நான் வரைந்த (ஆறாவது ஆள்) படத்தைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு இந்த ஆசை? ;-)

//Charlie Munger aa vittutenga?? //
ஜெகன்.. கருணாநிதியைப் பற்றிஎழுதிய பின் அன்பழகனைப் பற்றித் தனியாக எழுத வேண்டுமா? ஆதனால் தான் வாரன் மட்டுமே போதும் என விட்டுவிட்டேன்.

Kuppusamy Chellamuthu said...

ராம்பிரசாத், பரஞ்சோதி, SK மற்றும் மஞ்சூர் ராஜா. உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.

பிரேமா said...

மிகவும் ரசித்து ருசித்து படித்தேன்.
வாரன் பஃபட் மட்டுமே அறிந்த என்னை போன்றோர்க்கு பயனுள்ள தகவல்.
புகைப்படத்துடன் கூடிய அறிமுகம் அருமை.ம்ம்ம்ம்..தொடந்து எழுதுங்கள் படிப்போம்!!!

செந்தில் குமரன் said...

சிக்ஸர் அடிக்க சொன்ன ஒரே இடுகையில் சென்சுரி அடிச்சுட்டீங்க போங்க...

வெற்றி said...

குப்புசாமி செல்லமுத்து,
அருமையான பதிவு. எனக்கு வணிகத்துறை பற்றி ஒன்றுமே தெரியாது. உங்களின் பதிவைப் படித்து பல தகவல்களை அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி.

பி.கு:- நீங்கள் பொருளாதாரத்துறையைச் சார்ந்தவரா?

Kuppusamy Chellamuthu said...

மனசு, ஜான் மேஜர் தானுங்க. மாத்திரலாம். இங்கிலாந்து வரலாற்றில் அது ஒரு கருப்பு 'புதன்' என்று சொல்வார்கள். ஐரோப்பிய யூனியன் முழுதும் யூரோ கரன்சி இருக்கும் போது ஆங்கிலேயர்கள் மட்டும் ஏன் இன்னும் தங்கள் நாணயத்தை மாற்றாமல் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் கொண்டவர்கள் வேண்டுமானால் மேலும் ஆராயலாம்.

அர்ஷத் மேத்தா ரசித்த நபர் அல்ல; ஒரு களவானி. அத வரிசையில் வேண்டுமானால் ஒரு தனிப் பதிவு போடலாம்.

நமீதா மேட்டர் எழுதினா வேறு ஏற்ற இறக்கங்களும் இருக்கும் (இதயத் துடிப்பு முதலான) என்பதால் ....விடுங்க அப்புறம் பாத்துக்கலாம்.

முத்து(தமிழினி) said...

குப்பு,

நல்லா இருந்துச்சு..நன்றி.

Kuppusamy Chellamuthu said...

வவ்வால்:
நீங்க சரியாக எல்லைக் கோட்டுக்கு உள்ளே இருந்து பிடித்தீர்களா இல்லையா என்று மூன்றாவது நடுவரைக் கேட்டது அந்தக் காலம். இப்போதெல்லாம் லாரா சொன்னால் போதும். அவர் கிட்ட வேணாக் கேக்கலாம்!!

Udhayakumar said...

//Risk comes from not knowing what you're doing //

இது பங்கு சந்தைக்கு மட்டும் இல்லை, எல்லாவற்றுக்கும்தான்.

Udhayakumar said...

வாரன் பஃபட் தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது :-(

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இட்ஸ் டூமச்...,
ஓரவஞ்சனை...
இந்த பதிவு தொடங்கப்பட்டதின் நோக்கமே... சில புதியவர்களையாவது அறிமுகமாகிக்கொள்வதற்காத்தான்.
உண்மை அப்படி இருக்க...
யாரையுமே அழைக்க விரும்பாமல்.. முற்றும் போட திட்டமா உங்களுக்கு?
ஆறுபேரை அழைத்து தனிப்பதிவு போடுங்கள்....
அது தான் அழகும் கூட..
யாரை வேண்டுமானாலும் அழையுங்கள்.( நிபந்தனை: அவருக்கு தமிழில் ப்ளாக் இருக்க வேண்டும்)

நாகை சிவா said...

குப்பு ஸ்லோவாக ஆடி இருந்தாலும் அருமையாக ஆடி உள்ளீர்கள். முக்கிய புள்ளிகளை அறிந்து கொள்ள வைத்தற்கு நன்றி.
ஆனா ஒரு விசயமுங்க, ஒரு சிறந்த வியாபாரி அனைத்து விசயங்களையும் வியாபார கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பான் என்பது மிக சரி. நீங்க கூட பாருங்க, விளையாட்டை கூட உங்க பங்கு துறையுடன் அழகாக இணைத்து விட்டீர்கள்.

பொன்ஸ், நீங்க கரையோரம் நடுவதற்கு கொடுத்ததை அண்ணன், பங்கு வணிகத்திலே நட்டு விட்டார்.
வந்து கொஞ்சம் என்னு கேளுங்க...

துளசி கோபால் said...

குப்பு செல்லம்,

எனக்கு பங்குச்சந்தைபற்றி ஒண்ணும் தெரியாது. அதுக்காக அப்படியே வுட்டுறமுடியுமா?

ஆறாவது இடம் உங்க படம்னு நினைச்சுட்டேன். அது நீங்கதானே?:-)

வி.கண்ணன் said...

//நமீதா மேட்டர் எழுதினா வேறு ஏற்ற இறக்கங்களும் இருக்கும் (இதயத் துடிப்பு முதலான) என்பதால்//

எதுக்கு இப்படி இரட்டை அர்த்த வசனங்கள்?

Kuppusamy Chellamuthu said...

உங்களது ஊக்கத்திற்கு நன்றிகள் பிரேமா. Smoooth talk, உங்கள் ரசனைக்கும் நன்றி!! Same to you முத்து.

குமரன் எண்ணம், நீங்க சதம் அடிச்சதாச் சொல்றீங்க. ஆனா, வவ்வால் பறந்து வந்து பவுண்டரி லைன்ல கேட்ச் பிடிச்சதாச் சொல்றாரே?

வெற்றி, தகவல் பயனுள்ளதாக இருப்பதில் மகிழ்ச்சி.
//நீங்கள் பொருளாதாரத்துறையைச் சார்ந்தவரா?//
உங்கள் கேள்விக்குப் பதில் Yes & No. மின் மடலில் பரிமாறிக்கலாம்.

Anonymous said...

Excellent Article,
i never miss yours and Sadayam's article,
every day am waiting for you two's postings.

Regards
Raghs

Kuppusamy Chellamuthu said...

உதயகுமார், தெரியாததைச் செய்வது எல்லாமே ரிஸ்க் என்றால், நம்மில் பலர் காலேஜில் படித்ததே ரிஸ்க் தான். தெரிந்து தான் படித்தோமா என்ன? ;-)

//ஆறாவது இடம் உங்க படம்னு நினைச்சுட்டேன்.// கரெக்ட்டா சொன்னீங்க போங்க. எனது பதிவு, எனது கதை, எனது பேனா ..இது மாதிரி எனது படம் தான். :-)

//வியாபாரி அனைத்து விசயங்களையும் வியாபார கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பான்// நாகை சிவா, என்னவோ சொல்றீங்க போங்க. Great management principles can be explained with simple things that we come across in day-to-day life.

பொன்ஸ் & யாழிசைச் செல்வன் இருவருக்கும் ஒரு தனி விளக்கம், தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும்.

Anonymous said...

Very Nice Article Kuppu !

Vish

பொன்ஸ்~~Poorna said...

குப்பு,
நான் வந்து பார்க்கிறதுக்குள்ள இத்தனை நடந்து போச்சே! சரி, ஒண்ணொண்ணா சொல்றேன்:
1. நிறைய புது விசயம் சொல்லி இருக்கீங்க.. நீங்க சொன்ன புக்கெல்லாம் கிடைக்குதான்னு பார்க்கணும்.

2. வேற மாதிரி எழுதி இருந்தாக் கூட இத்தனை நல்லா வந்திருக்குமான்னு தெரியலை. "குப்பு ஸ்பெஷல்" பதிவாய்டுச்சு. உண்மையாவே நல்லா இருக்கு. :) (யாழிசை தாத்தா அப்படித் தான், ட்ரெடிஷனல். தாத்தா, சின்னப் பசங்க இப்படித் தான் புதுசு புதுசா ட்ரை பண்ணுவோம். பெரியவங்க கண்டு(டி)க்கக் கூடாது :))

3. //அடடா எழுதியிருக்கலாம்!!! // - குப்பு, நீங்க மனசையாவது கூப்பிட்டிருக்கலாம், அவராவது மனசுக்குப் பிடிச்ச மாதிரி எழுதி இருப்பாரு. (இப்போவும் நேரம் இருக்கு. ச்சும்மா கூப்பிடுங்க.)

4. வழக்கம் போல உங்க உவமான உவமேயங்கள் நல்லா இருக்கு. நிறைய விஷயம் வச்சிருக்கீங்க. எல்லாத்தையும் பின்னூட்டத்துலயே, ம்ம்ம், எத்தனை தடவை சொல்வேன். விடுங்க. :(

5. அட பரவாயில்லையே! ஜார்ஜ் சோரஸ் தவிர மத்தவங்க பேர் எல்லாம் எனக்குத் தெரியுதே! (ஆறாவது ஆள் நீங்க தான்னு முடிவே பண்ணிக்கிறேன் குப்பு :))

6. //பொன்ஸ், நீங்க கரையோரம் நடுவதற்கு கொடுத்ததை அண்ணன், பங்கு வணிகத்திலே நட்டு விட்டார். வந்து கொஞ்சம் என்னு கேளுங்க... //
சிவா, குப்பு இப்படி உவமைல பின்றாரு.. நீங்க என்னனா.. இதை இப்படிச் சொல்லணுங்க..
//பொன்ஸ், நீங்க கரையோரம் நடுவதற்குக் கொடுத்ததை அண்ணன், பங்கு சந்தைல போட்டுட்டாரு பாருங்க//

இப்போ பதில்: என்ன செய்ய சிவா?! பங்கு சந்தை எனக்கு இன்னும் லாபகரமா இருக்கும் போலிருக்கே!!.. என்னன்னு கேட்க மனம் வரலையே!! :)))

பொன்ஸ்~~Poorna said...

மிச்சமெல்லாம் சரிதான் குப்பு.. கடைசில அறு பேரைக் கூப்பிடாம விட்டது எனக்கும் வருத்தம் தான்.

இத்தனைக்கும் நான் சொன்ன ரெண்டு பேர், மனசு, உங்க பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் சதயம்.. இப்படி ஒரு ஆறு பேர் ஈஸியாத் தேத்தலாம்.. விருப்பம்னு போட்டாக் கூட போதும்.. அவங்க நிச்சயம் எழுதணும்னு சொல்ல வேண்டாம்..

இலவசக்கொத்தனார் said...

வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.

//நீங்க சரியாக எல்லைக் கோட்டுக்கு உள்ளே இருந்து பிடித்தீர்களா இல்லையா என்று மூன்றாவது நடுவரைக் கேட்டது அந்தக் காலம். இப்போதெல்லாம் லாரா சொன்னால் போதும். அவர் கிட்ட வேணாக் கேக்கலாம்!!//

:=D

Anonymous said...

யூதப் படைகளுக்குப் பலியாகாமல் தப்பிக்க நாடு கடந்தோடிய சோரஸின் நிலை தான் எம் மக்களுக்கும் இன்றைக்கு. சிங்களப் பேரினவாதத்தின் பேயாட்டம் என்றுதான் ஓயுமோ தெரியவில்லை.

- ஈழன்

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ், ரொம்ப நீளளளளப் பின்னூட்டம் போட்டுட்டீங்க. தேங்க்ஸ். நெறைய அப்செர்வ் பண்ணி இருக்கீங்க. ஆறு பேரத் தேத்தறதுக்குப் பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு..:-)

ஈழன், வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல சோரஸ் யூதப் படையினால் துரத்தப் பட்டவர் அல்லர். அவரே ஒரு யூதர், துரத்தியது நாசிப் படைகள். எல்லா வகையிலும் முன்னேறிய யூதர்களுக்கும் (இஸ்ரேலியர்களுக்கு என்றும் படிக்கலாம்) அவர் தம் பிரச்சினைக்கும் அகிலம் கொடுக்கின்ற முக்கியத்துவம், இலங்கைத் தீவில் ஒடுக்கப் படும் தமிழனுக்குக் கொடுப்பதில்லை என்கிற சோகம் இங்கே உணரப்படாமல் இல்லை.


கொத்தனார்; சிரிப்பு.... அதான் லாரா செஞ்சதப் பாத்து ஊரே சிரிக்குதே :-)

Anonymous said...

mr kuppu have you seen the developments in the indian stock market and particularly at the NSE's index componnent shars of LT,SAIL and Zee tele. these are all not figured into the fo list eventhough it figured into the cash segment of NSE nifty 50 bywhich the manipulators taken advantages in bringing up the cash nifty so that they can bring up up the future nifty whereas u cannot hedge the LT,SAIl and zeetele. now they have included ? this is being done after my sseveral mails to the SEBI/NSE/MOF. during the old time they said these shares are not having criteria to figure in FO. now what has been changed? if it these were not having the so caled criteria why it is being included in the cash segment from the beginning. these are all gimmicks? isn't it mr kuppu.

Sivabalan said...

குப்புசாமி

நல்ல பதிவு.

s said...

good article.keep it up.

yesrameshu