Tuesday, June 13, 2006

30% சரிவு சாத்தியமா??

-குப்புசாமி செல்லமுத்து

இதே பதிவு ஆங்கிலத்திலும்..

எல்லா பதிவுகளிலும் disclaimer போட்டு நெகட்டிவ் மேசேஜ் மட்டுமே நான் சொல்வதாக நண்பர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இருந்தாலும்...30% சரிவு சாத்தியமா??

இன்வெஸ்ட்மென்ட் வாத்தியார் மார்க் ·பேபர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்தியா ஷேர் மார்க்கெட் 30% குறையும்னு சொன்னாரு. இன்னொன்னு கூடச் சொல்லிருக்காரு அந்த ஆளு. அதாவது அக்டோபர் வரைக்கும் யாரும் ஷேர் மார்க்கெட் பக்கம் வராமே, லீவு போட்டுட்டுப் போகச் சொல்லிருக்கார்.

சரீ.. எதோ பெரிய மனுசன்..அவரு சொல்றத ஆராயறத விட்டுட்டு, நம்ம ரேஞ்சுக்கு ஒரு கால்குலேசன் போடலாமா? 30% சரிவு சாத்தியமா? இதே கேள்விய ஒரு மாசம் முந்தி யார்கிட்டயாவது கேட்டிருந்தா செருப்பால அடிச்சுருப்பாங்க. ஆனா இன்னிக்கு அது உண்மையாகிருச்சு. சென்செக்ஸ் 12,600 ல இருந்து 9,000 வந்துருச்சு. கிட்டத்தட்ட 30% கொறஞ்சுதா?? அத்த வுடுப்பா..இதுக்கு மேல (சாரி கீழ) கொறையுமா? ஹி..ஹி.. காலம் தான் பதில் சொல்லனும் அதுக்கு..

ஒரு நிறுவனம் பங்கு PE விகிதம் 25 என்ற அளவிலே பரிவர்த்தனை செய்யப்பட்டு வருவதாக வைத்துக்கொள்வோம். அவர்களின் பிசினஸ் சறுக்குவதால் அல்லது பொதுவாக சந்தை சரிவதனால், அதனை சந்தையின் அங்கத்தினர் PE விகிதம் 17 என்கிற அளவில் மறுமதிப்பீடு செய்வது என்பது நிகழக்கூடியது தான். அதாகப்பட்டது -32%. அதன் பின் அந்த நிறுவனம், அதன் துறை, தேசத்தின் பொருளாதாரம் முதலிய காரணங்களால் (மட்டுமல்லாது) மேலும் பாதிக்கப்படலாம்.

இன்று (13-ஜூன்-06) சென்செக்ஸ் சுமார் 9,000 என்ற அளவில் முடிவடைந்துள்ளது. சில நிபுணர்கள் மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணின் உண்மையான மதிப்பு 6000 முதல் 7000 வரை எங்கோ ஒரு புள்ளி எனக் கருத்துக் கூறுவதாக அறிகிறோம். இதனை மேலும் நோக்கும் முன், ஒரு விஷயத்தைத் தொட்டுப் பார்ப்பது நலம். பெரும்பாலான நிறுவனங்களின் இன்றைய (அல்லது கடந்த சில நாள்) விலை, அவை சென்செக்ஸ் 6,000 இல் இருந்த போது கிடைத்த அதே அளவிற்கு வீழ்ந்துள்ளது. என்னதான் குறியீடு 9,000 த்தில் ஊசலாடினாலும் ஆழமாகக் காலை விட்டுத் துழாவினால், பாதிப்பு அதனை விடப் பெரிதாகத் தட்டுப்படுகிறது.

கிட்டத்தட்ட எல்லா சிறு முதலீட்டாளர்களும் தங்கள் போர்ட்போலியோ(portfolio) மதிப்பில் 40 முதல் 60% வரை சராசரியாக தொலைத்திருக்கின்றனர். குறியீடு அடைந்த சரிவை விட இது அதிகமே. சென்செக்ஸ் என்பது ஒட்டு மொத்த சந்தையின் நிலையைத் துல்லியமாக வெளிக்காட்டும் அளவீடில்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஒன்று மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அது என்னவென்றால், இன்று 7,000/6,000 என இலக்குச் சொல்லும் பலரும் சில வாரங்களுக்கு முன் 15,000/17,000 என இலக்குச் சொன்னார்கள். அன்றைய கூற்று, "இந்தியாவின் பொருளாதாரம் மிக வலுவாக உள்ளது. நிறுவனங்கள் திறமையாகச் செயல்படுகின்றன. இளவயது மக்கள் சக்தி அதற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. பிற நாடுகளை விட சற்றே விலை கூடுதலாக இருந்தாலும், இங்கே கிடைக்கும் சரக்கின் தரம் அதிகம் என்பதனால் அது நியாயப்படுத்தப் பட்டதே. நீண்ட கால அளவிலே, விலைகள் கவர்ச்சிகரமாகத் தான் உள்ளன"

ஒரு மாதத்தில் பெரிதாய் (சிறிய மாறுதல்கள் உண்டு) ஒன்றும் மாறிவிடவில்லை என்றாலும், இன்றைய கூற்று, "பிற நாடுகளை விட இந்தியச் சந்தை காஸ்ட்லி. அரசின் ஏற்றுமதி-இறக்குமதி முரண்பாடு, பட்ஜெட் பற்றாக்குறை, கம்யூனிஸ்டுகள் அட்டகாசம், ஊழல் மிகுந்த அரசு இயந்திரம், முதிர்ச்சியற்ற பங்குச் சந்தை.......இன்னும் சிலதுகள்"

25 comments:

பொன்ஸ்~~Poorna said...

குப்பு,
யாராவது வாங்கி வித்தாத்தானே இந்த பங்குகள் விலை எல்லாம் மாறும் - ஏறும்/இறங்கும்? இப்படி அக்டோபர் வரை யாருமே பங்கு மார்க்கெட் பக்கம் வராதீங்கன்னா, பணசுழற்சியே இருக்காது.. Situation improve ஆகும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்?

முத்து(தமிழினி) said...

//அது என்னவென்றால், இன்று 7,000/6,000 என இலக்குச் சொல்லும் பலரும் சில வாரங்களுக்கு முன் 15,000/17,000 என இலக்குச் சொன்னார்கள். //

இந்த கருத்துக்கு எனக்கு ராயல்டி தரனும்க்.


வெளிநாட்டு பணம் வெளியேறுவது தான் முக்கிய காரணமாம். இங்கிருந்து சப்பான், சீனாவுக்கு நிறைய பணம் செல்வதாக கேள்வி. ம

Kuppusamy Chellamuthu said...

வாத்தியார் சொல்லி என்னிக்கு பசங்க கேட்டிருக்காங்க? அதே மாதிரி, வாத்தியாருக்கு எல்லாமே தெரியும்னு யார் சொன்னது பொன்ஸ்?

சும்மா மட்டும் இருக்க மாட்டாங்க. அவர் சொல்றதுல இருந்து நமக்குப் புரியறது, அக்டோபர் வரைக்கும் குறைஞ்சுக்கிட்டே தான் இருக்கும்ங்கறது தான். ஆனா அவர் சொன்னபடி நடக்கனும்னு அவசியம் இல்ல...

Kuppusamy Chellamuthu said...

உங்களுக்கு இல்லாததா முத்து? சிதம்பரம் கிட்டத் தூதுவிட்டு ராயல்டி வாங்கிடலாம்.

வெளிநாட்டுப் பணம் இருக்கட்டும். நக்சலைட்கள் (சந்தையில்) உள்ளே நுழைந்து அவர்கள் பங்குக்குக் குழப்பத்தை உண்டாக்குவதாக நண்பர் ஒருவர் கூறினார். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல...

நன்மனம் said...

//உண்மையான மதிப்பு 6000 முதல் 7000 வரை எங்கோ ஒரு புள்ளி என கருத்துக் கூறுவதாக அறிகிறோம்.//

8500 னு சொன்னாங்களே இல்லியா.:-(

என்னவோ போங்க.

ராபின் ஹூட் said...

//நக்சலைட்கள் (சந்தையில்) உள்ளே நுழைந்து அவர்கள் பங்குக்குக் குழப்பத்தை உண்டாக்குவதாக நண்பர் ஒருவர் கூறினார்.//
உங்க நண்பர், பங்குச் சந்தைன்னா, அவங்க ஊரு சந்தைக்கடைன்னு நினைச்சுச் சொல்லீருப்பாருங்க. :))

Kuppusamy Chellamuthu said...

நண்மனம், 20 ஓவர்ல 120/0 ன்னு ஸ்கோர் இருக்கும் போது 50 ஓவர்ல 300 வரும்னு சொல்றது ஈஸி. 30 ஓவர்ல 125/5ன்னு ஆனபின்னாடி அதுக்கு ஏத்த மாதிரி எதிர்பாக்கறாங்க.

அது இருக்கட்டும். 8500 என நான் கூறியதாக நினைவில்லை. நிபுணர்கள் (??) பரப்புவதை அப்படியே மறு வலைப்பரப்பு செய்வதோடு நின்று விடுகிறது நமது வேலை. என்னங்க சீரியசா பதில் சொல்லிட்டனா??

நன்மனம் said...

குப்புசாமி, எங்கயோ 8500 னு படிச்ச நியாபகம். நீங்க சொன்னீங்கனு சொல்லல.

அது சரி... நான் சொல்றது எல்லாமே ஜோக்கா எடுத்துக்கிட்டீங்களா:-(

எப்பவாச்சும் கொஞ்சம் சீரியசா போசுவேனுங்க:-)

சதயம் said...

எதன் அடிப்படையில் குப்புசாமி தன் கருத்தினை கூறுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.14ம் தேதி வரைக்கான எனது கணிப்பு சரியாக இருக்குமானால் நிச்சயமாய் சந்தை 16 ம் தேதிமுதல் திசைமாற வாய்ப்பிருக்கிறது

http://sadhayam2.blogspot.com/2006/06/blog-post_11.html

Techie.... said...

சண்டையினா சட்டை கிளியத்தான செய்யும். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ?

- அப்படின்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்.

- RAM

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ், எனது கூற்றிலே சொற்குற்றம்... பங்குச் சந்தைக்கு ஒட்டு மொத்தமாக விடுப்பு விடுமாறு மார்க் கூறியது போல நான் தமிழ்ப்படுத்தியதற்கு மன்னிக்கவும். அவர் சொன்ன வரிகள்..

my advice is to sell rallies in stocks and commodities and take a holiday until next October. This would particularly apply for the Indian stock market, where speculators are mostly heavily long

ஷேர் மார்க்கெட்டை இழுத்து மூடிட்டா CNBC காரங்க எல்லாம் சோத்துக்கு என்ன பண்ணுவாங்க? இன்னும் சின்னக் கொழந்தையாவே இருக்கீங்களே?

ஆனால், மார்க் சொன்னதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தினத்தில் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் சில இருப்பதாகவே உணர்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

my advice is to sell rallies in stocks and commodities
குப்பு,
சின்னக் குழந்தைக்கு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.. rallyன்னா என்ன?

Kuppusamy Chellamuthu said...

//எப்பவாச்சும் கொஞ்சம் சீரியசா போசுவேனுங்க:-)// நீங்க சொன்னதை நான் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை நன்மனம். ஆனா அதுக்காக சீரியசாவும் எடுத்துக்கல ;-)

//உங்க நண்பர், பங்குச் சந்தைன்னா, அவங்க ஊரு சந்தைக்கடைன்னு நினைச்சுச் சொல்லீருப்பாருங்க. :))//
ராபின், அவர் சொன்னது என்னவெனில், "இது போன்ற குற்றச்சாட்டை விசாரித்த போலீஸ், நிரூபிக்கப்படும் படியான ஆதாரங்கள் ஏதுமில்லை எனக் கண்டறிந்தனர்". மேட்டர் என்னன்னா, இந்த மாதிரி விஷயமெல்லாம் நாம விவாதிக்கனுமாங்கறது தான்.

Kuppusamy Chellamuthu said...

//எதன் அடிப்படையில் குப்புசாமி தன் கருத்தினை கூறுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை//

மதிப்பிற்குரிய சதயம், நான் கருத்து எதுவும் கூறவில்லை. கிடைக்கப்பெற்ற செய்திகளைப் (குறிப்பாக மார்க்கின் கருத்தை) பகிர்ந்தேன். பங்குச் சந்தை அங்கத்தினர்களின் அருகாமையும் எனக்கு இல்லை.

ஆங்கிலத்தில் சொல்கிறேன். A month back everyone hated a cynic, not every one hates an optimist. I am optimistic now. மற்றபடி 16ஆம் தேதிக்குப் பின் U-turn எடுக்குமா அல்லது V-turn எடுக்குமா என்றெல்லாம் கணிக்கிற ஆற்றல் எனக்கில்லை என்பதே உணர்ந்ததே எனது பலம். :-)

ஏற்கனவே 6,000 வந்துவிட்டது எனத்தானே சொல்லியிருக்கிறேன். ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்; திருத்திக்கொள்ளலாம். After all, we learn from each other.

manasu said...

குப்பு,
நீங்க அடிக்கடி கம்பேர் பண்ற மாதிரி சந்தையும், கிரிகெட்டும் ஒண்ணுதான் போல...

அதுலயும் இப்படிதான் ஜெயிச்சா 100 காரணங்கள், தோத்தா 1000 காரணங்கள்.

எல்லாம் கருத்து கந்தசாமிகளால் வர்றது.
ஹ்ம்ம்ம்ம் இப்ப என்ன பெருமூச்சு தான் விடலாம்.

பொன்ஸ்...

rallies na...
in stock exchange a renewed buying of stocks after a period of selling, leading to a rise in stock prices

திரும்ப விலை ஏறினாலும் வாங்கதேன்னு சொல்றார் போல... சரிதானே குப்பு?

Anonymous said...

இப்போதைக்கு கையக் கட்டிக்கிட்டு நாம பொறுமையா இருக்கிறது தான் நல்லது. நிலமை எப்படி போகும்னே சொல்லமுடியல்ல.
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா :-)) சரிதானே CK??

Kuppusamy Chellamuthu said...

//சண்டையினா சட்டை கிளியத்தான செய்யும்.// Good one..பங்கு முதலீடு என்பது சண்டையெல்லாம் இல்லை. அதிலே சில நுணுக்கங்கள் உண்டு. அதே நேரத்தில் பெண்ணின் மனது போல அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள எவராலும் முடியாது. உங்கள் உவமானத்திற்கு நன்றி :-)

pons, //Faber's advice is to sell rallies in stocks// அதாவது கண்மூடித்தனமாக ஏறிய ஷேர்களை விற்கச்சொல்லியிருக்கிறார். ஆனால் விலையை மட்டும் பாராமல் அதன் உள்ளார்ந்த மதிப்பினையும் கருத வேண்டும்.

மனசு தெளிவாக விளக்கியதாகவே தெரிகிறது. ஆனால், ஒன்றைத் தவிர //திரும்ப விலை ஏறினாலும் வாங்கதேன்னு சொல்றார் போல...// ஏற்கனவே ஏறியவற்றைத்தான் அவர் குறித்தார் என நினைக்கிறேன்.

ஒரு டெக்னிகல் புல்-பேக் இருக்குமென்பதில் ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து!

பரம பதத்தில் பாம்பின் கடி வாங்கினார் போல் கீழ் நோக்கி சரிகிறதே சென்செக்ஸ், இன்றைய நிலவரம் 9000 குறியீட்டுக்கிழே போய்விட்டதே (8810) ,முன்பே கூறினார்ப்போல 6000 - 6500 இல் தான் போய் நிலைக்கொள்ளும் போல் உள்ளது.

Kuppusamy Chellamuthu said...

//வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா :-)) // முன்பே சொல்லியிருக்கிறேன். விலை என்பது நிறுவனத்தின் மதிப்பை சந்தை நிர்ணயிப்பது அல்லது எதிர்பார்ப்பது.
ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை; உள்ளே இறங்கும் முன் அதனை உணர்ந்து கொள்வது அவசியம்.

//முன்பே கூறினார்ப்போல 6000 - 6500 இல் தான் போய் நிலைக்கொள்ளும் போல் உள்ளது.// keep your fingers crossed batman!!

சதயம் said...

குப்புசாமி, நான் உங்களை குறை சொன்னதாக நீங்கள் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள் என நிணைக்கிறேன்.
நீங்கள் எந்த அளவைகளின் அடிப்படியில் உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்றே சொல்ல முற்பட்டேன்...அவ்வளவே.

Kuppusamy Chellamuthu said...

சதயம், நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு எதுவும் தாங்கள் கூறவில்லையே? :-)

உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் எந்த அளவில் வரவேற்று மதிக்கிறேன் என உங்களுக்கே தெரியும்.

Kuppusamy Chellamuthu said...

Mark Faber கூறியதை யாரும் வேதவாக்காக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதற்கான ஒரு உதாரணம்.

"The weakness is likely to extend to February, then rally In March-April, after which there should be a renewed weakness in May "

ஏதோ வானிலை அறிக்கை மாதிரிப் பேசியிருக்கிறார் அந்த மனிதர் என்பது வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது புலனாகிறது.

Ravi said...

Are you saying that sensex would still go down? Do u need to wait till it reaches the bottom? Suggestions please..

Kuppusamy Chellamuthu said...

அனானி, நான் முன்பே சொன்னது தான். நிறைய நிறுவங்களின் பங்குகள் sensex 6000 த்தில் இருந்த போது கிடைத்த விலைக்கு இன்று கிடைக்கின்றன. Every body hated a cynic a month and now every one hates an optimist. I am an optimist now.

சந்தையின் சிகரத்தில் விற்பது எவ்வாறு நமக்கெல்லாம் இயலவில்லையோ, அதே மாதிரி அதன் பாதாளத்தில் வாங்குவதும் இயலாத காரியம். சிகரம், பாதாளம் என்பது அது கடந்த பின் தான் புலப்படும். இவ்விரு புள்ளிகட்கு இடையில் உள் நுழைந்து, வெளியேறி விளையாடுவதில் தான் திறமையே. மேலும் sensex அளவை மட்டும் நோக்காமல், நீங்கள் வாங்க விரும்பும் பங்குகளை ஆராய்வது அவசியம்.

உங்கள் கேள்விக்கு மேற்சொன்ன வரிகள் பதிலாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

Prema said...

ஆமாம் என்கிட்ட கூட சிலர் இதே கெள்வியத் தான் கேட்கிறாங்க!!
1.நீங்க எந்த கம்பனிய வாங்கிறீங்களோ அதை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு வாங்கனும்.
2.லாபம் நீண்ட்கால அடிப்படையில் எதிர்பார்க்க வேண்டும்.
இதுதான் இந்த சரிவுல நாங்க கத்துகிட்ட விலையுர்ந்த பாடம்.