Monday, May 22, 2006

SENSEX 10,000 மேலும் கீழும்-வாங்கலாமா?

குப்புசாமி செல்லமுத்து

21 மே 2006 அன்று Business Line பொருளாதாரத் தினசரியில் வந்த ஒரு கேலிச்சித்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடைந்ததில் கட்டு போடப்பட்ட கை கழுத்தில் தொட்டிலாடிய படி வரும் முதலீட்டு அறிவுரையாளர் (investment advisor) ஒருவர் தன் உதவியாளரைப் பார்த்துச் சொல்வதாக அமைந்திருந்தது அது.

"ஆமாய்யா.. சென்செக்ஸ் முதன் முதலா 10,000 போனப்ப ஸ்வீட் குடுத்தானே அதே ஆளு தான். இப்போ இப்படிப் பண்ணிட்டான்"

அருமையான மெசேஜ் சொல்கிறது இந்தக் கார்ட்டூன். சந்தை 9,000 புள்ளியில் இருந்து 10,000 புள்ளியைத் தொட்ட போது குதூகலித்தவர்கள் இப்போது அதே 10,000 இல் புலம்புவது ஏன்? அப்போதைக்கும் இப்போதைக்கும் மூன்று மாத இடைவெளி தான். இதில் பெரிதாக வருத்தப்பட ஒன்றுமே இல்லை.

"கம்மியா வாங்கினவங்களுக்கு வேணா இந்தத் தத்துவம் எல்லாம் சொல்லிக்க. எங்களை மாதிரி 12,000 க்கு மேல sensex இருக்கும் போது வாங்கினவங்க வலி உனக்கெல்லாம் எங்கே தெரியப்போகுது" என அங்கலாய்க்கலாம் சிலர். அடிப்படையை அலசிப் பார்த்தால் ஒரு பெரிய பிரச்சினையாக இதைச் சொல்லவே முடியாது.

பத்து இலட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறீர்கள். அதன் மதிப்பை நிர்ணயம் செய்யும் போது, குடிநீர் வசதி, சாலை வசதி, நகருக்கு அருகாமை, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களையும் ஆராய்வீர்கள். உங்களது வரையறையின் படி அதன் மதிப்பு கொடுக்கும் காசுக்குத் தகுந்தது தான் என் உறுதிப்படுத்துய பின்னர் தான் முதலீடு நிகழும். அதே போன்றதொரு பக்கத்து வீட்டின் உரிமையாளர் அதை 9 இலட்சத்திற்கு வேறு யாருக்கோ விற்கிறார். அதனால் உங்களுக்கு என்ன வந்தது? இன்னுமொரு வீடு அதே 9 இலட்சம் விலைக்கு உங்களுக்குத் தேவைப்பட்டால் கொடுக்கவும் தயாராக உள்ளார் அந்த நபர். இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி தானே? 10 இலட்சம் மதிப்புள்ள வீடு 9 இலட்சத்திற்குக் கிடைக்கிறதே!!

வேறு எவரோ தன் பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்பது இதே போலத் தான். ரூ.100 உள்ளடக்க மதிப்புள்ள நிறுவனத்தின் பங்கை நீங்கள் வாங்கிய முடிவின் தெளிவு, பிறர் அதனை வேறேதோ விலைக்குப் பரிமாறும் போது மாறாதல்லவா? பிறகென்ன? உண்மையைச் சொல்லப் போனால் பங்குச் சந்தைச் சரிவுகள் மேளதாளத்துடன் வரவேற்கப்பட வேண்டும். 100 மதிப்புள்ள சொத்து (பங்குகள் நிறுவனத்தின் ஒரு சிறிய பகுதியின் உரிமையை நிலை நாட்டும் உரிமை அல்லது சொத்துப் பத்திரம்) 80 க்கோ 75 க்கோ கிடைக்கும் போது சந்தோசப் படாமல் சும்மா ·பீல் பண்ணிக்கிட்டு... ஒரு வேளை தற்சமயம் வாங்குகிறவர்கள் உங்களை விட குறைந்த பணத்தில் அதே அளவுள்ள சொத்தை வாங்க வசதி ஏற்படுகிறது. கொஞ்சம் வேதனையாகத் தான் இருக்கும். இந்த நிலவரம் எல்லாம் தெரியாமலே இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காதல்லவா? அப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தானே?

"நான் எங்கய்யா வாங்கினேன்? எல்லாம் கூட வேல செய்றவன், ஷேர் மார்க்கெட் புரோக்கர் இந்த மாதிரி ஆளுங்க சொல்லி வாங்கினது தான்" எனச் சொல்கிற ஆளாக நீங்கள் இருந்தால் 'சாரி'. புரோக்கர் சொல்வதால் மட்டுமே கல்யாணம் செய்யாதவர்கள், வீடு வாங்காதவர்கள், பங்கு மட்டும் வாங்குவது ஏன்? ஆறாம் அறிவு படைத்த நாம் இவ்வாறு செய்யத் தேவையில்லையல்லவா?

பங்குச் சரிவுகளை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால்.. ஏற்கனவே ஒரு பதிவில் எழுதிய 'தள்ளுபடி விற்பனை' போலத்தான். "அதெல்லாம் சரி, ஆனால் இப்போது பார்த்து கையில் காசு இல்லை" என்று வருந்தினால் சுய நிதி நிர்வாகத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

மன உளைச்சலும், நிறையப் பணமும் சம்பந்தப்பட்ட அம்சம் என்பதால் பங்குச் சந்தைச் சரிவுகள் தூக்கமற்ற இரவுகளைத் தரவல்லவை. சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். என்னென்ன தவறு செய்தோம், அதை எப்பவித் தவிர்த்திருக்கலாம் எனக் காலப் போக்கில் பின்னோக்கிப் பார்த்து அவற்றில் இருந்து கற்றுக் கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு கற்கும் பாடத்தின் பயன்பாடு அதே தவறை மீண்டுமொரு தடவை செய்ய நேரும் போது கிடைக்கும் விழிப்புணர்வில் தான் தெரியும்.

20% வரை(யாவது) குறைகின்ற தனது முதலீட்டைத் தாங்கிக் கொள்கிற மனபலம் அற்றவர்கள் நேரடியாகவும், மியூச்சுவல் ·பண்ட் மூலம் மறைமுகவாகவும் பங்குகளில் முதலீடு செய்வது உகந்ததல்ல. அஞ்சலகச் சேமிப்புத் திட்டம், வைப்பு நிதித்திட்டம் என குறைவாக வருவாய் வந்தாலும் முதலீட்டின் மதிப்பு சரியாத ஆவணங்கள் தான் உங்களுக்கு அகந்தவை.

"sensex 13,000 இல்லாட்டி 15,000 போன உடனே வித்துட்டு காசு பாக்கலாம்னு தான் போன வாரம் வாங்கினேன்" என்று சில பேர் சொன்னார்கள். இவர்கள் முதலீட்டாளர்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட தொலிழில் பங்கெடுத்து அதில் வரும் நல்லது கெட்டதைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கமில்லாமல், பிறர் இதை விட அதிகமாக வாங்கினால் போதுமென்ற மனதுடன் நடந்து கொள்பவர்கள் இவர்கள். சூதாடிகள்/வியாபரிகள்/வர்த்தகர்கள் (speculators/traders) தானே ஒழிய இவர்களில் யாருமே முதலீட்டாளர்கள் இல்லை. Short term investor எனும் சொல்லே தவறானது. Any one who has a short term vision is only a speculator and not an investor. மூன்று மாதம் முதலீடு செய்யும் ஆசையில் வருபவனின் அறியாமையப் பயன்படுத்திக் கொள்ளவே மியூச்சுவல் ·பண்ட் ஏஜென்டுகளும், பங்குத் தரகர்களும் இருக்கிறார்கள்.

"சூப்பர்.. இப்ப நல்லா கம்மி ஆகிருக்கு. ஒரு இலட்சம் கடன் பெற்று ஷேர் வாங்கிட்டு அடுத்த வாரம் ஏறும் போது வித்துடலாம்னு இருக்கேன்" சில பேர் இது போல இருக்கிறார்கள். உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருந்தால் ராசிக்காரர் தான் நீங்கள். இருப்பினும் இதுவும் மோசமான அணுகுமுறை. முதலீட்டாளர் முகமூடியிட்டுச் சூதாடுகிறீர்கள்.

அப்ப என்ன தான் பண்ணலாம்னு ஐடியா? ஆர அமர யோசித்த பின்னர், முதலீடு செய்ய ஒதுக்க முடிந்த பகுதியை (மட்டும்) வீழ்ந்திருக்கும் தரமான நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கலாம். சரவணா ஸ்டோர்ல தள்ளுபடி சேல்ஸ் போட்டால் மட்டும் முந்தியடிக்கும் நாம் Dalal street இல் கிடைக்கும் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து பொருட்களையும் குறைந்த விலைக்கு வாங்கும் நாம் பங்குகள் குறையும் போது அச்சப் படுகிறோம்; அதிகமாகும் போது வாங்க ஆசைப்படுகிறொம். இத்தனை வல்லுனர்கள் நிறைந்த பங்குக் கட்டமைப்பில் குறியீடு சரிகிறதென்றால் அதற்குக் காரணம் இருக்கும்; நாம் ஒதுங்கியிருப்பதே நலம் என்பன போன்ற எண்ணங்களைத் தூக்கிக் கூடையில் போட்டு விடலாம்.

I wish you a very happy shopping in NSE & BSE. தள்ளுபடி என்பதால் மட்டும் கிடப்பதை எல்லாம் வாங்கிவிடாதீர்கள். தேவையான, காசுக்குத் தகுந்த மதிப்புள்ள பங்குகளை மட்டும் வாங்குங்கள். 'திருவாளர்.சந்தை' மிகுந்த மனக் கவலையில் இருக்கிறார். அது தானே நாம் கேட்பது?

வளம் பெறுவோம்!!

பி.கு: பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சரியும் போது சோகமடையத் தேவையில்லை என்பதை விவரிப்பதே இதன் நோக்கம். மற்றபடி இதற்குக் கீழ் குறையாது அல்லது மேலே நிச்சயமாக ஏறும் என்பன போன்ற பரிந்துரைகள் இங்கே செய்யப்படவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை தத்தம் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வோமாக!!

24 comments:

காசி (Kasi) said...

நல்ல விளக்கங்கள். நன்றி.

சதயம் said...

வணக்கம் நண்பரே,

தங்கள் பதிவை இப்பொழுதுதான் வாசித்தேன்....அனைவருக்கும் புரியும் வரை எளிய வார்த்தைகளினால் பங்குச் சந்தையின் நுட்பங்களை விளக்கியிருக்கிறீர்கள். அருமையான முயற்சி தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பங்குச் சந்தை தொடர்பான எனது பதிவினை இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் துவங்கினேன்.
http://sadhayam2.blogspot.com/

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
சரவணக்குமார்

பொன்ஸ்~~Poorna said...

இப்போ என்ன சொல்றீங்க? கையக் கட்டிகிட்டு சந்தை ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துகிட்டு இருக்கச் சொல்லுறீங்களா?
ரொம்பக் குழப்பறீங்க!!!

முத்து(தமிழினி) said...

மாதமாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் போனாலும் பரவாயில்லை என்று நல்ல கம்பெனியா பார்த்து வாங்கி போட்டா போதுமா சார்?

நன்மனம் said...

// பொன்ஸ் said...
இப்போ என்ன சொல்றீங்க? கையக் கட்டிகிட்டு சந்தை ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துகிட்டு இருக்கச் சொல்லுறீங்களா?
ரொம்பக் குழப்பறீங்க!!! //

பொன்ஸ், நிதானமா இருங்க, அவசரபட்டு முடிவு (விக்கறது / வாங்கறது) எடுத்திறாதீங்கனு தான் சொல்ல வராரு. இது ஒரு செய்தி, இத வெச்சு சமயத்துக்கு/தேவைக்கு தகுந்தா மாதிரி முடிவு எடுங்கனு சொல்லறாரு. சரியா குப்புசாமி சார்.

பிரதீப் said...

நல்லா பொட்டில அடிச்ச மாதிரி சொன்னீங்க ஐயா.
குறுகிய கால முதலீட்டாளர்கள் அப்படிங்கற போர்வையில டிமாண்ட் அதிகமாகிறதால, தானா சப்ளை குறையிறதால ஒரு வீக்கம் உருவாகி சென்செக்ஸ் பறக்குது.

அத்தோட சென்செக்ஸ் அப்படிங்கறதே ஒரு 30+ கம்பெனிகளோட பங்குகளை வச்சிச் சொல்றதுதானே.. சென்செக்ஸ்ல இல்லாத சில கம்பெனிகள் இன்னும் பிரமாதமா போகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறதுதானே?

Kuppusamy Chellamuthu said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். மாலையில் பதில் எழுதுகிறேன்...

Kuppusamy Chellamuthu said...

பாராட்டலுக்கு நன்றி காசி சார்.

நண்பர் சதயம் சரவணக்குமாரை வங்கு வணிகம் வலைப் பதிவு வரவேற்கிறது. தங்களது இனிய வாசகங்கள் ஊக்குவிக்கத் தான் செய்கிறது. தவறான செய்திகள், விளக்கங்கள் இங்கே தரப்பட்டால் சுட்டிக்காட்டுங்கள். பாராட்டுகளை விட விமர்சனங்களும் வந்தால் நல்லது தானே? ஏனென்றால் இது பணம் சார்ந்த விஷயம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில நேரங்களில் படிப்பதைக் கிரகித்து அதன் படி யாரேனும் நடக்கலாம்.

உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ், உங்க கேள்வியை பிரதீப் சொல்கிற அம்சத்தை வைத்தே அலசிப் பார்க்கலாம்.

SENSEX என்பது மும்பைப் பங்குச்சந்தையில் வியாபாரமாகும் பெரிய 30 நிறுவனங்களின் விலையை ஒட்டி கணிக்கப்படும் குறியீட்டு எண். இந்த 30 கம்பெனிகளின் விலையேற்ற இறக்கம் மற்ற பங்குகளைப் பாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இருந்தாலும் இவை அளவில் மிக மிக மிகப் பெரியதாக இருக்கிற படியால், இவை சரியும் போது பிறதுகளும் சரிகின்றன. குறியீடு 10% இறங்கினால் ஒரு தனி மனிதன் வைத்திருக்கும் பங்குகள் 50% கூடக் குறையலாம். குறையாமல் அதிகரித்தாலும் ஆச்சரியம் இல்லை.
யானைகள் அடிக்கப் படும் போது கூடவே சேர்ந்து பூனைகளும் அடி படுவதுண்டு, கடந்த ஒரு வாரத்தை போல. இது போன்ற தருணங்களில் நல்ல கம்பெனிகள் சில அடி மாட்டு விலைக்குக் கிடைப்பது உண்டு. ஒரு உதாரணம் சொல்கிறேன். Sensex சுமார் 5,500 ஆக இருந்தபோது 70 ரூபாய்க்கு விற்பனையான அரவிந்த் மில்ஸ் நேற்று தற்காலிகமாக சந்தை மூடப்பட்ட போது ரூ.57 க்குக் கிடைத்தது. (அந்த நிமிட நிலவரப்படி) இரண்டு வருடத்தில் குறியீடு 81% ஏறியிருந்தாலும் arvind mills மட்டுமே நீங்கள் வாங்கி வைத்திருந்தால் உங்கள் காசு அதே 2 வருடத்தில் 18% காணமல் போயிருக்கும்.

இன்னொரு விஷயம். அரவிந்த் மில்ஸ் போலவே பல நிறுவனங்களின் பங்குகள் சென்செக்ஸ் சரிந்ததை விட அதிகமாக நேற்றுச் சரிந்தது. அப்போ வாங்கிப் போட நல்ல வசதி தான். (குறைந்தால் மட்டுமே வாங்குவது கூட ஒரு நோய்). ஒரு காலத்தில் 2000 அளவில் நிலவிய Himachal futuristic கம்பெனி இன்று 20 களில் தள்ளாடுகிறது. அதன் business எப்படிப் போகிறது என்பதனையும் பார்க்க வேண்டும்.

அடிக்கடி நான் சொல்வது, "எந்தப் பங்கில் முதலீடு செய்வது என்பது எளிதான முடிவு. ஆனால் எந்த விலையில் வாங்க வேண்டும் என்பது தான் கடினமான விஷயம்". அது மாதிரி ஏதாவது நிறுவனங்கள் உங்களது ரேடாரில் இருந்தால் அதை இப்போது வாங்கிப் போடலாம். அண்மையில் இருந்ததை விட இவை சற்று மலிவாக இப்போது கிடைக்கின்றன. இன்னும் குழப்புகிறேனா பொன்ஸ்?

வாங்கலாமா வேண்டாமா என்பதில் குழப்பமே இல்லை. ஒன்று மட்டும் நினைவு வையுங்கள். You are neither right or wrong because some one else says so, but because your analysis and knowledge says so.
குழப்பத்தான் செய்கிறேன்..இல்லையா? ஒரு செய்தி. எனக்குத் தெரிந்து தன் சுய முடிவில் நம்பிக்கை படைத்த ஒருவர் நேற்று மட்டும் நிறைய வாங்கினார். அவை .. ITC, TISCO, BHEL, ICICI, SBI, L&T & NTPC பங்குகள். That does not mean that every one should do the same..

பி.கு: அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, அதன் விளைவாய் உயரும் பணவீக்கம், வட்டி வீதம், ஈரான் போர் அபாயம் என பல காரணிகளால் மீண்டும் இறக்கத்தைச் சந்தித்தாலும் ஆச்சரியப் பட வேண்டாம்.

(thanks for your views Pradeep)

Kuppusamy Chellamuthu said...

//
மாதமாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் போனாலும் பரவாயில்லை என்று நல்ல கம்பெனியா பார்த்து வாங்கி போட்டா போதுமா சார்?
//
தமிழினி.. மாதா மாதம் போனாலும் சரி வந்தாலும் சரி, நல்ல கம்பெனியைத் தான் நீங்கள் வாங்க வேண்டும். உங்களுக்குப் புரியாத தொழில் செய்யும் நிறுவனங்களையும் தவிர்க்கலாம். 'தம்' அடிக்கிற ஆளாக இருந்தால் ITC பற்றி நன்றாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; 8PM பிரியர் என்றால் Redico Khaitan வளர்ச்சி எங்கனம் எனக் கண்டு கொள்ளலாம். அப்படி..

உதாரணமாக pharma நிறுவனங்களிம் பிசினஸ் மாடல் எனக்குப் புரிவதில்லை. அதனாலேயே அதனைத் தவிர்த்து விடுகிறேன் நான். ஒரு மெடிக்கல் ரெப் நம்மை விட நிறையத் தெரிந்திருப்பார்..

Kuppusamy Chellamuthu said...

ஆமாம் நன்மனம்.. நீங்கள் சொல்வது தான் நான் கூற விழைவது. சென்ற கமெண்டிலேயே குறிப்பிட நினைத்தேன். தவற விட்டேன்.

மன்னிக்கவும்..

பரஞ்சோதி said...

நல்ல பதிவு, என்னை போன்றோருக்கு உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

செய்தி ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் கொடுத்து பலருடைய வயிற்றில் புளியை கரைக்கின்றன.

பொன்ஸ்~~Poorna said...

குப்புசாமி,
//அது மாதிரி ஏதாவது நிறுவனங்கள் உங்களது ரேடாரில் இருந்தால் அதை இப்போது வாங்கிப் போடலாம். அண்மையில் இருந்ததை விட இவை சற்று மலிவாக இப்போது கிடைக்கின்றன. இன்னும் குழப்புகிறேனா பொன்ஸ்?//
இல்லீங்க.. குழப்பமா இல்லை.. இது தெளிவாகவே இருக்கு.

இதையே நீங்க ஒரு தனிப் பதிவாப் போடலாம். பங்கு சந்தை பேஸிக்ஸ் மாதிரி.. ண்ஸே. Bஸேக்கு நடுவில் ஏதாவது வித்தியாசம் இருக்கா என்றும் தனியாகப் போடுங்க.. (அதாவது, ஒரே கம்பனி ரெண்டிலயும் வரும்போது, என்ன வித்தியாசம்?)

Smooth Talk said...

நன்றி குப்புசாமி!

எல்லோரும் ஐயோ பங்குச் சந்தை சரிகிறதே என்று புலம்பும் இந்த வேளையில் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

Kuppusamy Chellamuthu said...

//
எல்லோரும் ஐயோ பங்குச் சந்தை சரிகிறதே என்று புலம்பும் இந்த வேளையில் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..
//
ஆமாம் smooth talk. இரு மாறுபட்ட கோணம் தான். இதைப் படித்துவிட்டு எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் பொறுப்பல்ல :-) சும்மா தமாசு.. (இல்லாவிட்டாலும் அது தான் உண்மை)

//
பங்கு சந்தை பேஸிக்ஸ் மாதிரி.. ண்ஸே. Bஸேக்கு நடுவில் ஏதாவது வித்தியாசம் இருக்கா என்றும் தனியாகப் போடுங்க.. (அதாவது, ஒரே கம்பனி ரெண்டிலயும் வரும்போது, என்ன வித்தியாசம்?)
//
கண்டிப்பா போடலாம் பொன்ஸ்.. நீங்க சொல்லச் சொல்லத் தான் தெரியுது. இல்லாட்டி, நல்லதோ கெட்டதோ ஏதாவது நானே ஒரு யூகத்துல எழுத வேண்டியிருக்கு.

-குப்புசாமி செல்லமுத்து

Dubukku said...

nice one..
I have linked this in Desipundit. http://www.desipundit.com/2006/05/24/sensex/

Hamilton said...

Basically most of the small time investors are like herds of sheep. They just follow what other do and actually dont even apply some minimal analysis

Hamilton said...

Its all a sense of herd of sheeps mentality

Anonymous said...

anaivarum purindhu kollum padiyana nalla padivu.

I often hear the words "call option","put option" and "speculation" but dont know what these terms stands in stock market.It would be great if you give some insight on these basic terms in layman concepts.

Kuppusamy Chellamuthu said...

நல்ல காரியம் செய்தீர்கள் டுபுக்கு சார். நன்றி சொல்லியே ஆக வேண்டும். நானும் தேசி பண்டிட் பார்த்தேன் :-)
நிறையப்பேர் கவனிக்கும் போது கவனமாகவும், பொறுப்பாகவும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Kuppusamy Chellamuthu said...

//sically most of the small time investors are like herds of sheep. //

சரியாகச் சொன்னீர்கள் ஹேமில்டன்.

அனானி, அனைவரும் புரிந்துகொள்ளும் படியான பதிவு எனக் கேட்கும் போதே சந்தோசமாக இருக்கிறது.

Call & put options மற்றும் futures இரண்டும் தருவிகள் (derivativeச். அவற்றை விளக்க நிறைய எழுத வேண்டும். போகப் போகச் செய்யலாம். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

பெத்த ராயுடு said...

ITC பற்றி சொன்னீர்கள். அந்நிறுவனம் சிகரெட் தயாரிப்பிலிருந்து விலகி ஹோட்டல் மற்றும் விவசாய உணவு, பதப்படுத்திய உணவுத் துறையில் இறங்கியுள்ளது. இரண்டிலும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

Kuppusamy Chellamuthu said...

சரியாகச் சொன்னீர்கள் பெத்தராயுடு.

ITC நிறுவனம் Ashirwad, sunfeat முதலிய உணவு வகைகளோடு, John players/wills life style ஆடை உலகிலும் கால் பதித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல் மற்றும் உணவகத் தொழில் பற்றிச்சொல்லவே தேவையில்லை. காதிதம் & பேக்கேஜிங் துறையில் கூட இருக்கிறது ITC.

மற்றபடி சிகெரட் தொழிலை விட்டு முழுதுமாக விலகி விடவில்லை. என்றுமே அந்தத் தொழிலில் நம்மவர் தான் கிங் (kings & wills)

-குப்புசாமி செல்லமுத்து

Anonymous said...

Nice Post Kuppu!

Vish