Thursday, May 25, 2006

டெக்கான் ஏர்லைன்ஸ் IPO

-குப்புசாமி செல்லமுத்து

படிக்க நேர்ந்த ஒரு செய்தியைப் பகிரவே இந்தப் பதிவு.

மலிவு விலை வானூர்திச் சேவை நிறுவனமான டெக்கான் ஏர்லைன்ஸ், முதல் பொது வெளியீடு (IPO - Initial Public Offer) விடுவதைச் சிலர் அறிந்திருக்கக் கூடும். ஆரம்பத்தில் மே 18 முதல் 23 வரை அதன் கால அளவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விலை எல்லை (price band) ரூ150-175 ஆக இருந்தது.

கடந்த ஒரு வாரமாகப் பங்குச்சந்தையில் நிலவும் பீதி காரணமாக சொற்ப எண்ணிக்கையிலேயே டெக்கான் நிறுவனத்திற்கு விண்ணப்பங்கள் வந்தன. எப்படியாவது விற்பனையை முடித்துவிட்டால் போதுமென்கிற போக்கில் வெளியீட்டின் இறுதித் தேதியை மே 26 வரை நீடித்திருக்கிறார்கள். அதே போல விலைப் பட்டையும் ரூ146-175 ஆகத் தளர்த்தப் பட்டுள்ளது. ஆன போதும் இவ்வெளியீடு முழுமையாக விற்றுத் தீருமா எனத் தெரியவில்லை. விண்ணப்பங்கள் சீண்டிவாரின்றிக் கிடப்பதைச் செய்தியில் காணுங்கள்.

சில துணைச் செய்திகள்:
  1. என்ன தான் மலிவு விலையில் விமானச் சேவை செய்தாலும், நிறுவனம் மிகுந்த கடனில் இருக்கிறது.
  2. விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடும் போட்டியை உருவாக்குகிறது.
  3. தற்போது இந்தியப் பங்குச் சந்தையில் விற்பனையாகும் ஒரே நிறுவனமான ஜெட் ஏர்லைன்ஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 1,100 ரூபாய் IPO வில் வெளிவந்தது. நேற்றைய (மே-24) நிலவரப்படி அதன் விலை ரூ.750.
  4. தொலைபேசி நிறுவனங்கள் போலவே விமானச் சேவை நிறுவனங்களும் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டி இருப்பதால், இலாபத்தின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கே தர வேண்டியிருக்கிறது. பிசினஸ் வளர்ந்தாலும், பங்குதாரருக்குக் கிட்டும் இலாபம் கிடுகிடுவென உயரும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
பி.கு: இது எனது தனிப்பட்ட பார்வை தானே ஒழிய, பிறரது கருத்தை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. சுய ஆய்வின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது அவா.

11 comments:

பொன்ஸ்~~Poorna said...

நீங்க சொன்ன துணைச்செய்திகளாலதான் இந்தப் பங்கை யாரும் வாங்காமல் இருக்கிறார்கள் போலும்..

ஏர் டெக்கான் தவறான நேரத்தில் இந்தப் புதுப் பங்கு வெளியீட்டைச் செய்திருக்கிறது என்பது என் எண்ணம்.. தேர்தலுக்கு முன்னே வந்திருக்கலாம்...

Kuppusamy Chellamuthu said...

இருக்கலாம் பொன்ஸ்.

நமக்கு எப்பவுமே cynic இமேஜ் தான்.

Anonymous said...

I think Peter Lynch of Fidelity had said "Buy what you know". That is, you might have some information which some hot-shot analyst sitting in an A.C. office in Mumbai won't know.

Having travelled in Kingfisher, I can say it is simply the best airline in India today.

Air Deccan is full of horror stories of flight delay and cancellation. I have seen many people suffer because of this. So, I decided to skip this IPO.

Of course, I might be wrong and this might turn out to be a multi-bagger. As you have emphasized in previous posts, every person should analyze and come to his/her own decision.

Vish

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ் சொல்வது போல தேர்தலுக்கு முன், பின் என்பது இங்கு பிரச்சினையாகத் தெரியவில்லை. சரிவுக்கு முன், பின் என்பதே சரியான பார்வை.

அனானி (விஷ்), பின்னூட்டத்திற்கு நன்றி. இந்திப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்த இளையராஜா போல, இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நடுக்குடிகளை விமானத்தில் பறக்கச் செய்தது டெக்கான். அதனால் ஜெட் ஏர்வேஸ் க்கு பலத்த அடி.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். இங்கே பிரயாணிகள் தான் கூத்தாடிகள்.

கிங்·பிஷர் கூட IPO வெளியிடக் காத்திருக்கிறது.

-குப்புசாமி செல்லமுத்து

சதயம் said...

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலத்தான் டெக்கானின் நீட்டிப்பும் அதற்கான விளக்கமும், 'சந்தைக்கு விடப்பட்ட அனைத்து பங்குகளுக்கும் விண்ணப்பங்கள் வந்துவிட்டாலும் கூடுதல் கேட்பு விலைக்காக'வும்தான் இந்த நீட்டிப்பு என்கிற காரணமும் சொல்லப்படுகிறது.

சந்தை 'Nose Dive' அடித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு பலமடங்கு விண்ணப்பங்களும் அதிக பட்ச கேட்பு விலையும் வந்திருக்க வேண்டும்.

சந்தையில் பெருகிவரும் கடும் போட்டியினைச் சமாளிக்க இவர்கள் எத்தகைய திட்டம் வைத்திருக்கின்றனர் என்பதும் குழப்பமாய் இருக்கிறது.நிதி நிலையும் பிரமாதமாய் இல்லை.

Kuppusamy Chellamuthu said...

சரியாகச் சொன்னீர்கள் சதயம்...

வெளியீட்டை நடத்திக் கொடுக்க்கும் முதலீட்டு வங்கிகட்கும் (investment bankers acting as lead managers) இது கெளரவப் பிரச்சினை.

//That is, you might have some information which some hot-shot analyst sitting in an A.C. office in Mumbai won't know//
அனானி... சோக்கா சொன்னீங்க போங்க... அதோடு சேர்த்து கொஞ்சம் அக்கவுண்டன்சியும் புரிந்து கொள்வது நலம் பயக்கும். கோவையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை மட்டும் வாங்கியதால் 'போண்டி' ஆன கோயம்புத்தூர்காரர்கள் சிலரை நான் அறிவேன்.

-குப்புசாமி செல்லமுத்து

Sivabalan said...

சார்,

மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் விமான சேவையும் ஒன்று!!


அப்படியிருக்க, ஏன் இந்த IPO தினறிக்கொன்டிருக்கிறது.

தொலை நோக்கோடு பார்த்தால், இத்துறை மிகவும் இலாபகரமான துறை என நான் என்னுகிறேன்.

மிக நல்ல பதிவு.

மிக்க நன்றி.

Kuppusamy Chellamuthu said...

வாங்க சிவபாலன். மெத்தச் சரி தாங்கள் சொல்வது.

கடுமையான போட்டி காரணமாக ஏறும் எரிபொருள் செலவை வாடிக்கையாளர்களிடத்தில் பகிர வேண்டிய கட்டாயம். என்ன தான் விற்பனை அளவு (top line or sales) வளர்ந்தாலும், நிறுவனத்திற்குக் கிட்டும் நிகர இலாபம் (bottom line or profit) அதே விகித்த்தில் வளராதோ என்பது நிபுணர் கருத்து. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் கடந்த அரை நூற்றாண்டில் நிகழ்ந்த வான்வழிப் பயண வளர்ச்சி அங்கே இயங்கி வரும் நிறுவனங்களின் பங்குதாரருக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்கிறார்கள்.

இன்னொரு விஷயம். IPO வில் அமோக வரவேற்புப் பெற்ற நிறுவனங்களெல்லாம் பொக்கிஷங்களும் இல்லை; பெறாதவை குப்பைகளுமில்லை.

-குப்புசாமி செல்லமுத்து

Anonymous said...

so, you are not advising to apply for this IPO?

பெத்த ராயுடு said...

//கோவையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை மட்டும் வாங்கியதால் 'போண்டி' ஆன கோயம்புத்தூர்காரர்கள் சிலரை நான் அறிவேன்.//

இப்பத்தான் கோவையைச் சேர்ந்த 'கங்கோத்ரி டெக்ஸ்டைல்ஸ்' மில்லோட பங்கு வெளியீடு முடிஞ்சிது :))

Kuppusamy Chellamuthu said...

அனானி, டெக்கான் ஏர்லைன்ஸ் விண்ணப்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் சுய ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. செய்திகளை மட்டுமே நாம் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். Investors should take informed decision not influenced decision.

பெத்தராயுடு, 'கங்கோத்ரி டெக்ஸ்டைல்ஸ்' குறித்து அதிகமாக எனக்குத் தெரியாது. அதனால் 'நோ கமெண்ட்ஸ்'. கோவையைச் சேர்ந்த நிறுவனங்கள் சில மிகச் சிறப்பாக இயங்குவதாகத் தெரிகிறது (LMW, pricol etc..) ஏதாவது தவறாகக் கூறியிருந்தால் திருத்துங்கள்.
-குப்புசாமி செல்லமுத்து